கழுகார் பதில்கள்

சுந்தரிப்ரியன், வேதாரண்யம்.
 விஜயகாந்த்தின் படுதோல்வியில் இருந்து அவரும், அவரது கட்சியும் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?


 எந்த முடிவாக இருந்தாலும் சொந்தமாக எடுக்க வேண்டும். அடுத்த கட்சித் தலைவர் சொல்கிறார் என்பதற்காக எடுக்கக் கூடாது. தனியாக நின்றபோது ஒரு சீட்டாவது கிடைத்தது. ஆறு கட்சிகளோடு சேர்ந்தபிறகு டெபாசிட்கூட காணாமல் போனது இதனால்தான். மேலும், தேர்தல் நேரத்தில்தான் விஜயகாந்த்தும் பிரேமலதாவும் தெருவுக்கு வருவார்கள் என்றால், அவர்கள் வீட்டுக்குள் இருப்பதே நல்லது என்று மக்கள் நினைத்தது எப்படி தப்பாக இருக்க முடியும்?

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.
 ‘ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்றதற்கு விஜயகாந்த்துக்கும் டாக்டர் ராமதாஸுக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும்’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் சொல்லி இருக்கிறாரே. ஏன்?


 ஏன் இளங்கோவனும்தான் காரணம். இதைக் கருணாநிதிகூடச் சொல்கிறார். சொந்தப் பலவீனங்கள் ஆயிரம் இருக்கும்போது, அவர் இருந்தால் ஜெயித்திருக்கலாம், இவர் இருந்திருந்தால் ஜெயித்திருக்கலாம் என்று சொல்வது எல்லாம் சப்பைக்கட்டுகள்தான்.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.
 உண்மையில் சாதனை வெற்றி ஆளும் கட்சிக்கா... எதிர்க் கட்சிக்கா?

 1984 தேர்தலில்கூட இந்திரா காந்தி மரணம், அமெரிக்கா புருக்ளின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் சிகிச்சை என எம்.ஜி.ஆர் மூன்றாவது முறை வெற்றிபெறச் சாதகமாக அமைந்திருந்தது. அதன்பிறகு, தமிழகத்தில் ஆட்சி மாறிமாறித்தான் வந்துள்ளது. அதில், பிரேக் போட்டு நிறுத்தி தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சியைத் தக்க வைத்துள்ளதுதான் ஜெயலலிதாவின் பலம்.

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.
 பல கட்சிகள் எல்லாவற்றையும் இழந்து நிற்பது பற்றி..?


 இழந்து நிற்கிறார்கள் என்று சொல்ல முடியாது. உண்மையில் என்ன இருந்தது என்பது இப்போதுதான் பட்டவர்த்தனமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. விளம்பர வெளிச்சங்களில் தங்களைப் பூதாகரமாகக் காட்டிக்கொண்டவர்கள் தனித்துப் போட்டியிடும்போது தன்னந்தனியாகவே இதுவரை வலம் வந்துள்ளார்கள். இந்த யதார்த்தத்தை அந்தத் தலைவர்கள் இனியாவது உணர வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்