வீழ்த்தப்பட்ட வைத்திலிங்கம் - வியூகம் அமைக்கும் ஜெ.!

முன்பு பெங்களூரில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைச்சாலைக்குப் போனபோது, யார் முதல்வராக ஆவார்? என்கிற பேச்சு எழுந்தது. அப்படிப் பேசப்பட்டவர்களில் வைத்திலிங்கமும் ஒருவர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் சீனியாரிட்டியில் முதல்வராக ஆனார். அப்படிப்பட்ட வைத்திலிங்கம், இப்போது ஒரத்தநாடு தொகுதியில் தோற்றுள்ளதன் மூலம் மாநில அரசியலில் அதிகாரம் பொருந்திய அமைச்சர் பதவியை கைப்பற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.

நடந்து முடிந்த தேர்தலின்போது ஜெயலலிதாவுக்கு உதவியாக அனைத்துத் தேர்தல் ஏற்பாடுகளையும் முன்னின்று வைத்திலிங்கம்தான் கவனித்தார். ஜெயலலிதா அடிக்கடி அழைத்துப் பேசுகிறவர் என்பதால், கட்சியில் இரண்டாவது ரேங்க்கில் வைத்துக் கட்சிக்காரர்களால் பார்க்கப்பட்டார். தப்பித் தவறியும்கூட, ‘வைத்திலிங்கத்துக்கு எந்த முக்கியப் பதவியும் கிடைத்துவிடக் கூடாது’ என்கிற முடிவுக்கு வந்ததுபோல, ஒரத்தநாடு தொகுதியில் நின்ற வைத்திலிங்கத்தை, ஸ்கெட்ச் போட்டு தோல்வியடையச் செய்துள்ளனர் அ.தி.மு.க-வின் வி.ஐ.பி கோஷ்டியினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்