வெயிலை வெல்வது எப்படி?

‘வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி’ எனப் பாட நினைத்தாலும் வெயிலின் தாக்கத்தால் பாட்டோட வரிகள்கூட மறந்துபோகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் உஷ்ணம் குறைந்தபாடில்லை. ஆண்டு தோறும் வெயிலின் வீரியம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தச் சூழலானது நம் உடல், மனம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை எப்படிப் பாதிக்கிறது என நிபுணர்கள் சிலரிடம் கேட்டோம்.

உடலை எப்படிப் பாதிக்கிறது?

புகழேந்தி (பொதுநல மருத்துவர்): ‘‘மனித உடலில் 50 - 65 சதவிகிதம் நீர் இருக்கிறது. வெயில் காலத்தில் அது குறைய வாய்ப்பு உள்ளது. வியர்வையுடன் தண்ணீர் மட்டுமின்றி, எலக்ட்ரோலைட்ஸும் வெளியேறும். நீர் அதிக அளவு வெளியேறுவதால், ரத்த அழுத்தம் குறையும். அம்மை நோய் ஏற்படும். இதைக் கட்டுபடுத்த அதிகமாகத் தண்ணீர் அருந்த வேண்டும். மோர், ஜூஸ், இளநீர் போன்றவற்றையும் அருந்தலாம். நீர் சத்துக்கள் நிறைந்த காய்கறிகளும், பழங்களும் உட்கொள்வது அவசியம். வெயிலில் செல்வதால் தோல் வியாதிகள் அதிகம் வரக் கூடும். வியர்வை வெளியேறாமல் இருப்பதால் பூஞ்சை தொற்று (Fungus infection) வரலாம். வெளியே செல்லும்போது பருத்தி உடைகள் அணிவது அவசியம். அதிக வெயிலால் வெப்ப பக்கவாதம் (Heat stroke) வரவும் வாய்ப்பு உள்ளது. இது சிவப்பு அணுக்களில் உள்ள பொட்டாசியம் (Potassium) உடைந்து ரத்தத்தில் கலந்து இதயத்தின் செயல்பாட்டை நிறுத்தச் செய்யும்.

வெயிலில் வேலை செய்பவர்களுக்கு, குறிப்பாகத் தோட்ட வேலை பார்க்கும் இளைஞர்கள் பலருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்படுகிறது. தேவையான தண்ணீர் அருந்தாமல் இருப்பதுதான் இதற்குக் காரணம் என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் தலைச்சுற்றல், மயக்கம், தோல் வியாதிகள், அரிப்பு போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன. வியர்வையைக் கட்டுப்படுத்தும் பவுடர்களைப் பயன்படுத்தக் கூடாது. அவை, வியர்வையை வெளியேறவிடாமல் துவாரங்களை அடைத்துக் கொள்ளும். உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்