நீதிபதிகள் செக்... வழக்கறிஞர்கள் திக்!

மிழக நீதித்துறைக்குள், ‘புயலுக்கு முன் நிலவும் மயான அமைதி’ புகுந்துள்ளது. வழக்கறிஞர்கள் மிரண்டுபோய் உள்ளனர். பார் கவுன்சில், தனது அதிகாரம் பறிக்கப்பட்டதாகக் குமுறிக்கொண்டிருக்கிறது. நீதிபதிகள் நிம்மதிப் பெருமூச்சுவிடுகின்றனர். காரணம், வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம்.

வழக்கறிஞர்கள் தவறு செய்தால், அவர்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாது. பார் கவுன்சிலுக்குத்தான் புகார் அனுப்ப முடியும். அதை விசாரித்து பார் கவுன்சில்தான் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். ஆனால், இனி அந்த நிலை கிடையாது. தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க முடியும். வழக்கறிஞர் சட்டம் 34-ல் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள், அதற்கு வழி செய்துள்ளன. அதுதான் தற்போது நீதித்துறைக்குள் பெரும் பிரளயத்தைக் கிளப்பி உள்ளது.

நீதிபதியின் பெயரைச் சொல்லிப் பணம் பெறுவது; நீதிமன்ற உத்தரவுகள், ஆவணங்களை மாற்றுவது; நீதிபதி அல்லது நீதித்துறை அதிகாரிகளுக்கு எதிரான தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது; நீதிபதிகள் மீது ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் ஆஜராவதற்கு நிரந்தரமாகவோ, நீதிமன்றம் முடிவுசெய்யும் காலம் வரையோ தடை விதிக்கப்படும். இதற்கு 14 ஏ-பிரிவு வழி ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் புதிய சட்டத்திருத்தம் பற்றி நீதித்துறை வல்லுநர்களின் கருத்தைக் கேட்டோம்.

 நீதிபதி சந்துரு(ஓய்வு): ‘‘டெல்லியில் நந்தா என்பவர் காரை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார். அதில் பலர் உயிரிழந்தனர். அந்த வழக்கில், ஆர்.கே.ஆனந்த் என்ற மூத்த வழக்கறிஞர் ஆஜரானார். அவர் சாட்சிகளைப் பணம் கொடுத்து மாற்ற முற்பட்டதை, ‘தெஹெல்கா’ பத்திரிகை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. அதன்பேரில், வழக்கறிஞர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. அதை விசாரித்த, டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், வழக்கறிஞர் ஆனந்தின்  உரிமத்தை ரத்துசெய்தது.

பின்னர் சீராய்வு மனுவில் அவரது தண்டனை குறைக்கப்பட்டு 14 லட்சம் ரூபாய் அபராதமும், ஒரு வருடம் ஏழைகளுக்கு சட்ட உதவி செய்யும் வழக்குகளில் மட்டும் ஆஜராகும்படியும் உத்தரவிடப்பட்டது. 2009-ம் வருடம் வெளியான அந்தத் தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் எல்லா உயர் நீதிமன்றங்களுக்கும் ஓர் உத்தரவிட்டது. வழக்கறிஞர் சட்டம் 34-வது பிரிவின்படி நீதிமன்றங்களுக்குள் தவறிழைக்கும் வழக்கறிஞர்களைத் தண்டிக்கும் வகையில் இரு மாதங்களுக்குள் தக்க விதிகளை வகுக்க வேண்டும் என்று சொன்னது.

ஆனால், இத்தனை ஆண்டுகள் கழித்து, இப்போதுதான் அதற்கு வழி பிறந்துள்ளது. நீதிமன்றத்துக்குள் ஊர்வலங்கள், முழக்கங்கள், வழக்காடுபவர்கள் தாக்கப்படுவது, நீதிபதிகளின் சாதியைக் கூறி வழக்கு மாற்றம் கேட்பது என இன்னும் எத்தனையோ பட்டியலிட முடியாத
அசிங்கங்கள் அரங்கேறுகின்றன. அதற்கெல்லாம் இந்தச் சட்டத் திருத்தம் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்