மறைந்து கிடக்கும் மர்மங்கள் - ‘வேந்தர் மூவிஸ்’ மதன்

ன்ன ஆனார் ‘வேந்தர் மூவிஸ்’ மதன்? என்று கடந்த இதழில் எழுதி இருந்தோம். மதன் மாயமானதைத் தொடர்ந்து அதிர்ச்சி அளிக்கும் பல விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் நிழல் வேந்தராக வலம் வந்த மதன், ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு திடீரென மாயமாகிவிட்டார். இந்த விவகாரத்தில் எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமத்தையும், அதன் நிறுவனர் மற்றும் வேந்தர் பாரிவேந்தரையும் சுற்றிச் சர்ச்சைகள் வலம் வருகின்றன.

இப்போது, எஸ்.ஆர்.எம் கல்லூரியில் சீட் வாங்குவதற்காக மதனிடம் பணம் கொடுத்தவர்கள் போலீஸில் புகார் கொடுத்து வருகிறார்கள். திருச்சியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரிடம் பேசினோம். “என் மகனை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தரின் கல்லூரிச் சேர்க்கை நிர்வாகியான ‘வேந்தர் மூவிஸ்’ மதனை அணுகினேன். அவர், 2016-17-ம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு 62 லட்சம் ரூபாய் கேட்டார். 27.2.2016 அன்று ரூ.52 லட்சம், 11.3.2016 அன்று ரூ.10 லட்சம் என ரூ.62 லட்சம் மதனிடம் கொடுத்தேன். என் மகன் ப்ளஸ் 2-வில் போதிய கட்ஆஃப் மார்க் பெறாததால், பணத்தைத் திருப்பிக் கேட்டேன். 23.5.2016 அன்று மதனின் தம்பி சுதீர் மூலம் ரூ.10 லட்சம் திருப்பிக் கொடுத்தார். மீதியை 30.5.2016 அன்று தருவதாகச் சொன்ன அவர், அதன் பிறகு போனை எடுக்கவே இல்லை” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்