‘‘கடன் தள்ளுபடியால் அரசியல்வாதிகளுக்குத்தான் ஆதாயம்!’’

யற்கைச் சீற்றங்கள், உரிய கொள்முதல் விலை கிடைக்காதது, பயிர்க்கடன், டிராக்டர் கடன் போன்ற பிரச்னைகளால் கடந்த 5 ஆண்டுகளில் 2,423 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக்காப்பகம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள், விவசாயக் கடனை மையமாகவைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டன.

தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. முதலமைச்சராகப் பதவி ஏற்ற ஜெயலலிதா, விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தவதாக அறிவித்தார். இதுதொடர்பாக விவசாய சங்கப் பிரதிநிதிகளிடம் பேசினோம்.

தெய்வசிகாமணி (தலைவர், விவசாய சங்கங்களின் கூட்டியக்கம்): ‘‘தமிழகத்தில் 90 லட்சம் விவசாயிகள் தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். மாநில அரசு 11 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் தர முடியும். இவர்கள் போக எஞ்சிய 78 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கியுள்ளனர். இந்த நிலையில் பதவியேற்ற முதலமைச்சர், ‘5 ஆயிரத்து 780 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்கிறோம். இதனால், 5 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்’ என்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்தத் துறையின் அப்போதைய   அமைச்சர் வைத்திலிங்கம், ‘11 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு, 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டு உள்ளது’ என்றார். ஆனால் முதலமைச்சரோ, ‘5 ஆயிரத்து 780 கோடி ரூபாய் தள்ளுபடியின் மூலம் 5 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்’ என்கிறார். கடன் தொகை அதிகபட்சமே 5 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக இருக்கும்போது, 5 ஆயிரத்து 700 கோடி ரூபாய் தள்ளுபடி செய்கிறோம் என்கிறார் முதலமைச்சர். 200 கோடி ரூபாய் கூடுதாலாகியது எப்படி? எஞ்சிய ஆறு லட்சத்து 50 ஆயிரம்  விவசாயிகள் என்ன ஆனார்கள்? அவர்களுக்கு கடன் கொடுக்கவில்லையா? முதலமைச்சரின் இந்த அறிவிப்பு மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்