‘பணக்கார வேட்பாளன் ஏழை வேட்பாளனை தோற்கடிப்பான்!’

புது தத்துவம் சொல்லும் அரசியல் தியரி

1977-ம் ஆண்டு. பஞ்சாப் மாநிலம் பெரஸ்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் நடந்த பொதுத் தேர்தல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தத் தொகுதியில் சிரோமணி அகாலி தளமும் காங்கிரஸும் மோதின. பெரஸ்பூர் தொகுதியில் அடங்கியிருந்த 9 சட்டசபைத் தொகுதிகளில் 8 தொகுதிகளின் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுவிட்டன. அதுவரை சிரோமணி அகாலி தளம்தான் முன்னணியில் இருந்தது. 9-வது சட்டசபைத் தொகுதியின் ஓட்டுகள் எண்ண ஆரம்பித்தபோது தகராறு ஏற்பட்டு வன்முறை வெடித்தது. அப்போது வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்ததால் வாக்குச்சீட்டுகள் கிழித்து எறியப்பட்டு வாக்கு எண்ணும் மையம் சூறையாடப் பட்டது. இதனால் பெரஸ்பூர் தேர்தலை ரத்துசெய்தது தேர்தல் கமிஷன். இதை எதிர்த்து அகாலி தளத்தின் வேட்பாளரான மொகிந்தர் சிங் கில் போட்ட வழக்கை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்தது. ‘எட்டு சட்டமன்றத் தொகுதிகளின் ஓட்டுகள் எண்ணப்பட்டுவிட்டன. 9-வது தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்தினால் போதும்’ என கோர்ட்டில் வாதம்வைத்தார் மொகிந்தர் சிங் கில்.  கிருஷ்ணய்யர் தலைமையிலான பெஞ்ச், ‘9 தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டுமா அல்லது ஒரு தொகுதியில் மட்டும் நடத்த வேண்டுமா என்பதைத் தேர்தல் கமிஷன்தான் முடிவுசெய்ய முடியும். அதன் நடவடிக்கையில் நாங்கள் தலையிட முடியாது’ எனச் சொன்னது. ‘அணைக்கட்டுக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ, அதேபோன்ற அதிகாரம் கொண்டது தேர்தல் கமிஷன். அணைக்கட்டில் தேங்கியிருக்கும் தண்ணீர் எப்படி அணைக்கட்டை வைத்திருக்கிறதோ அதேபோல நியாயமான தேர்தலை நடத்த, தனக்கு என்ன தோன்றுகிறதோ அத்தனையும் செய்யத் தேர்தல் கமிஷனுக்கு சகல உரிமை இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளவுக்கு மீறிய அதிகாரத்தைத் தேர்தல் கமிஷனுக்கு அளித்திருக்கிறது’ எனத் தீர்ப்பில் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், ‘பெரஸ்பூர் தேர்தல் ரத்து என்கிற அறிவிப்பு செல்லும்’ எனத் தீர்ப்பு எழுதியிருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்