கழுகார் பதில்கள்

ஆர்.ஷண்முகம், கும்பகோணம்.
 அரசியல் அனுபவம் என்ற சாணக்கியத்தனம் மிகுந்த கருணாநிதியால் தி.மு.க-வை ஆட்சிப் பீடத்தில் அமரவைக்க முடியாதது ஏன்?


 ஒரு ராஜதந்திரி தனது அதிகபட்ச ராஜதந்திரத்-தாலேயே வீழுவார் என்பதற்கு உதாரணம் கருணாநிதி. ‘என்னை முதலமைச்சராக அறிவியுங்கள்’ என்று கேட்ட ஸ்டாலினிடம், ‘உன்னை அறிவித்தால் அழகிரி பிரச்னை செய்வார், விஜயகாந்த் நம்முடைய கூட்டணிக்கு வரமாட்டார்’ என்று சொல்லியே தட்டிவிட்டார் கருணாநிதி. அவர் எதைச் சொல்லி ஸ்டாலினை ஏமாற்றினாரோ அந்த விஜயகாந்த்தே வரவில்லை. அழகிரி வீட்டைவிட்டே வெளியில் வரவில்லை. ஸ்டாலினை தட்டிக்கழிக்க நினைத்தார் கருணாநிதி. மக்கள் அவரை தட்டிக்கழித்தார்கள்.

மேலும், சாணக்கியத்தனம் என்பது அறிவுரை சொல்வது... அமல்படுத்துவது அல்ல. சாணக்கியன் சொன்னார்... சமுத்திரகுப்தன் செய்தார். ஆனால், கருணாநிதி ஒரே நேரத்தில் சாணக்கியனாகவும் சமுத்திரகுப்தனாகவும் தொடர நினைத்தார். அவரது தந்திரங்கள் அனைத்தும் காலாவதி ஆனவை. மக்கள் பார்த்துப் பார்த்து புளித்துப் போனவை. அதனால்தான் அவை எடுபடாமல் போயின.

எஸ்.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.
 அப்துல் கலாம் பெயரைவைத்து அரசியல் கட்சி தொடங்கினாலும், மக்கள் நலக் கூட்டணி என்று பெயர் வைத்துக்கொண்டாலும் தமிழக மக்களின் ஆதரவைப் பெறுவது கஷ்டம்தான்போல..?


 என்ன பெயர் வைக்கிறீர்கள் என்பது முக்கியம் அல்ல... என்ன சொல்ல வருகிறீர்கள், சொல்வது யார் என்பதுதான் முக்கியம்.

 த.சத்தியநாராயணன், அயன்புரம்.
 தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்குள் நடந்துவிடுமா?


 தேர்தல் நடக்கும். நேர்மையாக நடக்குமா என்பதுதான் சந்தேகம். அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரண்டு வேட்பாளர்களும் பணத்தை அள்ளிவீசும் கொடுமை இரண்டு தொகுதிகளிலும் நடந்தது. ஜனநாயகத்தின் மிக மோசமான முகத்தை இந்த இரண்டு தொகுதிகளும் அனுபவிக்கின்றன.

எஸ்.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.

 காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லாமல் அதிக தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் தி.மு.க போட்டியிட்டு இருந்தால் இன்னும் அதிக தொகுதிகளில் வென்று இருப்பார்களா?


 அப்படிச் சொல்ல முடியாது. 8 இடங்களில் காங்கிரஸ் வென்றுள்ளது. அது, அந்தக் கட்சிக்கு மரியாதையைத் தந்துள்ளது. காங்கிரஸ் கட்சி இல்லாமல் போயிருந்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் தி.மு.க அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றி இருக்க முடியாது. தென் மாவட்டங்களில் சில தொகுதிகளை இழந்திருக்கக்கூடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்