"ஜெயலலிதாவின் நாகரிக நாடகம் உள்ளாட்சித் தேர்தல் வரைதான்!"

அன்புமணியின் அதிரடி

“எங்களை சாதிக் கட்சி, பிராந்தியக் கட்சி என்று சொன்னவர்கள் எல்லாம் தேர்தலுக்குப் பிறகு எங்களைத் திரும்பிப் பார்க்கிறார்கள். இரு கட்சிகளுக்கு மாற்றாக நாங்கள் வளர்ந்துள்ளோம். கடந்த ஓர் ஆண்டு உழைப்பின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. வரும் ஐந்து ஆண்டுகள் இதே வீரியத்தோடு செயல்பட்டு 2021-ம் ஆண்டை பா.ம.க-வின் வெற்றி ஆண்டாக மாற்றிக் காட்டுவோம்” என்று நம்பிக்கையோடு பேசுகிறார் அன்புமணி ராமதாஸ். தேர்தல் முடிவு குறித்தும், பா.ம.க-வின் திட்டங்கள் குறித்தம் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“தமிழக சட்டமன்றத்  தேர்தல் முடிவை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“இந்தத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறமுடியாவிட்டாலும், தி.மு.க - அ.தி.மு.க-வுக்கு நாங்கள்தான் மாற்று என்று நிரூபித்துள்ளோம். பா.ம.க. தொடங்கியபின் நாங்கள் சந்தித்தத் தேர்தல்களில் 23 லட்சம் வாக்குளைத் தனித்து வாங்கியுள்ளோம். 100 தொகுதிகளில் 12 சதவிகித வாக்குகளும், 50 தொகுதிகளில் 16.5 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளோம். நான்கு தொகுதிகளில் இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளோம். இது எங்களின் மாற்று அரசியலுக்கான பலன். நாங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும், எங்கள் கொள்கை வெற்றி பெற்றுள்ளது. மதுவிலக்கு முதல் லோக் ஆயுக்தா வரை நாங்கள் முன்வைத்த கொள்கைகளை அ.தி.மு.க அரசு செயல்படுத்த முனைவது எங்களுக்கு வெற்றிதான். எங்கள் கொள்கைகளை மற்ற கட்சிகள் காப்பியடித்து உள்ளன.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்