தனிக்குடித்தனம்... தயாராகிறதா பிரிட்டன்?

ராஜ்சிவா

துவரை ஐரோப்பியக் குடும்பத்தில் அங்கம் வகித்து வந்த பிரிட்டன், “எங்களுக்கு உங்களுடன் ஒட்டும் வேண்டாம்...  உறவும் வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (EU) பிரிவதற்குத் தயாராகிறது. ‘ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்திருக்க வேண்டாம்’ என்பதற்கான வாக்கெடுப்புகள் ஏற்கெனவே பலமுறை நடைபெற்றிருக்கின்றன. முன்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில், 40 சதவிகிதமான மக்கள் விலகக் கூடாது என்றும், 43 சதவிகித மக்கள் விலக வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்கள். இதில் எஞ்சியிருக்கும் 17 சதவிகிதமான மக்கள், எதையும் தீர்மானிக்கும் நிலையில் இல்லை. இந்த மக்களில் சிலர் ஏதாவது ஒரு பக்கத்தில் சாய்ந்தாலும், அது 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக மாறிவிடும். அதனால், பிரிவினை என்பதற்கான முடிவை எடுப்பது பெரிய சிக்கலாகவே பிரிட்டன் அரசுக்குக் இருந்தது. ஆனால் இப்போது, 2017-ம் ஆண்டுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்துவிட வேண்டுமென்று பெரும்பாலான பிரிட்டன் மக்கள் நினைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்