நீதிமன்றத்தில் நாற்காலி சர்ச்சை!

சட்டப் பஞ்சாயத்து Vs வழக்கறிஞர்கள்

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்​துக்கு உள்ளே நாற்காலிகளில் அமர்வதில் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே பிரச்னை வெடித்துள்ளது.

வழக்கறிஞர்கள் சிலர், சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவஇளங்கோவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அங்கு என்ன நடந்தது என்று சிவஇளங்கோவிடம் கேட்டோம். “பத்திரிகைகளுக்கு தமிழக அரசு எவ்வளவு தொகைக்கு விளம்பரம் கொடுக்கிறது என்கிற விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகக் கேட்டோம். அந்தத் தகவல்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை. மாநிலத் தலைமைத் தகவல் ஆணையராக இருந்த ஸ்ரீபதியிடம் 7.1.2015 அன்று நேரில் சென்று விளக்கம் கேட்டோம். அப்போது, அங்கிருந்த நாற்காலியில் நான் உட்கார்ந்தேன். என்னை அங்கு உட்காரக் கூடாது என்று சொன்னார்கள். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னையில், தேனாம்பேட்டை போலீஸார் என்னைக் கைதுசெய்தனர். இந்த வழக்கு விசாரணை சைதாப்பேட்டை பெருநகர 18-வது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையில் ‘பார்ட்டி இன் பெர்சன்’ ஆக நானே வாதாடுவதற்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்றுள்ளேன். அந்த உத்தரவுக்கு, இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஆனந்தவேல் அனுமதி அளித்து இருந்தார். அவருக்குப் பதிலாக சில மாதங்களுக்கு முன்பு வந்த மாஜிஸ்திரேட் மோகனா, உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றவில்லை. அவரிடமும் உயர் நீதிமன்ற உத்தரவின் நகலை கொடுத்தோம். ஆனால், பல மாதங்கள் ஆகியும் அவர் எந்தவித பதிலையும் சொல்லவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்