‘‘மூன்று மாணவிகள் தற்கொலை அல்ல... அது கொலைதான்!”

கள்ளக்குறிச்சி கல்லூரி தாளாளர் பகீர்...

ள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் கல்லூரியின் மூன்று மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. ‘அது தற்கொலை அல்ல... கொலை’ என்று மாணவிகளின் பெற்றோர் சொன்னார்கள். வழக்கு, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்குப் போனது. கல்லூரித் தாளாளர் வாசுகி நீதிமன்றத்தில் சரணடைந்தார். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள அவரை, அவரது வழக்கறிஞர் உதவியுடன் சந்தித்தோம்.

‘‘உங்கள் கல்லூரியில் அதிகக் கட்டணம் வசூலித்ததால்தான், மூன்று மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனரா?”


‘‘எங்கள் கல்லூரியில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் மிகக் குறைவான கட்டணம் வாங்கும் கல்லூரி எங்களுடையதுதான். அதை நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள். இரண்டாவது, அந்த 3 மாணவிகளும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர்கள் கொலை செய்யப்பட்டனர்.”

‘‘அவர்கள் கொலை செய்யப்பட்டனர் என்று எப்படிச் சொல்கிறீர்கள். அதற்கு யார் காரணம்?”

‘‘இரண்டு ரியல் எஸ்டேட் தாதாக்கள், ஒரு கல்லூரி நிர்வாகி, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், ஒரு தலைமைக் காவலர், எங்கள் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்ட சில முன்னாள் மாணவர்கள் சிலர் ஆகியோர் சேர்ந்து அந்த மாணவிகளை கொலை செய்துள்ளனர். பிறகு, அதைத் தற்கொலையாக மாற்றி உள்ளனர். என்னை அழிப்பதற்காக, என் கல்லூரியை இழுத்து மூடுவதற்காக அவர்கள் இதைச் செய்துள்ளனர். இதை நான் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் முன்னிலையில் வெளிப்படையாகச் சொன்னேன்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்