“இது பொம்பளைக்காக நடந்த படுகொலை!”

சர்வேயர் கொலை... சதிகாரர் வாக்குமூலம்

ஒரு கோடி கேட்டு கடத்தப்பட்ட குவளைச்செழியன், பின்னர் காரில் தீவைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் பணம், பெண், அரசியல் எனப் பதறவைத்திருக்கிறது.

ஓசூர் சர்வேயர் குவளைச்​செழியன். கடந்த மே 27-ம் தேதி மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, 1 கோடி கேட்டு அவருடைய மனைவி ரேவதியை மிரட்டியுள்ளனர். அடுத்த நாள் அதிகாலை ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி ராமமூர்த்தி நகர் ரோடு ஓரத்தில் உள்ள பள்ளத்தில் காரை கவிழ்த்து தீவைத்து எரிக்கப்பட்டுள்ளார். எரிந்துகொண்டிருந்த வாகனத்தை அந்தப் பகுதி மக்கள் பார்க்கச் சென்றபோது, பூந்தோட்டத்தில் ஓடி ஒளிந்த சக்திவேலை பிடித்து தீவட்டிப்பட்டி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

சக்திவேலிடம் போலீஸார் விசாரித்ததில், ‘‘நான் சேலம் அம்மா பேட்டையைச் சேர்ந்த இக்ரமுல்லா மல்டிலெவல் மார்க்கெட்டிங்கில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலை பார்த்தேன். அவ்வப்போது இக்ரமுல்லாவின் காருக்கு ஆக்டிங் டிரைவராகவும் இருப்பேன். அவருக்கு 3 மனைவிகள். இது தவிர பல பெண்களோடு அவருக்குத் தொடர்பு இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்