“ஓட்டுக்கு 300 ரூபாய் கொடுத்தேன்!”

அ.தி.மு.க. வேட்பாளர் ஓப்பன் டாக்!

ள்ளாட்சிப் பதவியும் தேர்தல் அரசியலும் பணம் பண்ணுவதற்காகத்தான் என்பதற்கு காஞ்சிபுரம் அ.தி.மு.க-வில் நடக்கும் அதிரடிக் காட்சிகளே உதாரணம். காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஜெ. பேரவைக் கிளைச் செயலாளர் ‘புல்லட்’ பரிமளம் என்பவர், எலெக்ட்ரிக் டெண்டர் ஊழல், பாதாளச் சாக்கடை ஊழல், பணி நியமன ஊழல் என காஞ்சிபுரம் நகராட்சியின் 10 ஊழல்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்். அ.தி.மு.க நகராட்சித் தலைவர் மைதிலி திருநாவுக்கரசுக்கு எதிரான போஸ்டர்கள்தான் காஞ்சிபுரத்தின் தலைப்புச் செய்தியாக இருக்கிறது.

‘புல்லட்’ பரிமளத்திடம் பேசினோம். “மார்ச் மாசத்துல நகராட்சியிலே மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 100 கோடி ரூபாய் டெண்டர் விட்டாங்க. அதில் வந்த மொத்த கமிஷனையும் நகராட்சித் தலைவர் மைதிலி திருநாவுக்கரசே  எடுத்துக்கிட்டாங்க. கமிஷன் கொடுத்தே ரெண்டு வருஷத்துக்கு மேல ஆகுது. நாங்களும் கேட்டுப் பார்த்தோம். அவங்க அசையறா மாதிரி இல்லை. அதான் வெளிப்​படையா போஸ்டர் போட்டோம். கட்சிக்காரங்ககிட்ட அரவணைப்புக் கிடையாது. குழாய் பதிக்கறதுக்குக்​கூட 500 ரூபாய் வாங்குறாங்க. நகராட்சியில நான்கரை வருடத்தில் 250 கோடி ரூபாய்க்கு மேல ஊழல் செய்திருக்காங்க. கான்ட்ராக்டர்களைக் கேட்டுப் பார்த்தா அவங்க கதையைப் புட்டுபுட்டு வைப்பாங்க. மத்த கவுன்சிலர்​களையும் கேட்டுப்பாருங்க” எனச் சீறுகிறார் புல்லட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்