வசூல் வேட்டையில் பல்கலைக்கழகம்...

மறுமதிப்பீட்டில் ரூ.75 கோடி!

பொறியியல் விடைத்தாள்களின் மறுமதிப்பீடு மூலமாகக் கடந்த 5 ஆண்டுகளில் 75 கோடி ரூபாயை அண்ணா பல்கலைக்கழகம் வசூலித்துள்ளது என்ற செய்தி பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. 2011 முதல் 2015 வரை, விடைத்தாள் நகல்களுக்கு 28.82 கோடி ரூபாய், மறுமதிப்பீட்டுக்கு 46.65 கோடி ரூபாய் என மொத்தம் 75 கோடி ரூபாய் திரட்டியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

விடைத்தாள்களின் மறுமதிப்பீடு மூலமாக அண்ணா பல்கலைக்கழகம் வசூல் செய்துள்ள கட்டணம் தொடர்பான தகவல்களை பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்ட ‘ஆன்லைன் ஆர்.டி.ஐ’ (ONLINE RTI) என்ற நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்றுள்ளது. இந்த விவரங்கள் கடந்த மே 30-ம் தேதி வெளியிடப்பட்டன. அந்த விவரங்களை ஆராய்ந்து பார்த்தோம்.

2015-ம் ஆண்டு, மே - ஜூன் மாத செமஸ்டர் தேர்வுகள் நடந்தன. அதில், 6.41 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். அவர்களில், 2.53 லட்சம் பேர் தேர்ச்சிப் பெறவில்லை. மொத்தம் 2,53,074 பேர் விடைத்தாள் நகலுக்கும், 1,09,159 பேர் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கும் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் 46,535 பேர், மறுமதிப்பீட்டுக்குப் பிறகு தேர்ச்சி அடைந்துள்ளனர். இது, கிட்டத்தட்ட 42 சதவிகிதம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்