“வசூலித்த பணத்தை ஒப்படைத்துவிட்டார் மதன்...”

எப்போது விலகும் எஸ்.ஆர்.எம். மர்மம்?

‘வேந்தர் மூவிஸ்’ மதன் மாயமான நாளில் இருந்து எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பாரிவேந்தர், அவரது மகன் ரவி ஆகியோர் மீது சரமாரியான குற்றச்சாட்டுகள் அடுக்கப்படுகின்றன.

பாரிவேந்தர்தான் தெய்வம்!

மதனின் தாயார் தங்கத்திடம் பேசினோம். “மதன் காணாமல் போனதைத் தொடர்ந்து அவனைப் பற்றிப் பலவிதமான செய்திகள் வருகின்றன. தற்கொலை செய்து கொண்டானா, கடத்தப்பட்டானா, கொலை செய்யப்பட்டானா என ஒன்றும் தெரிய வில்லை. மகனைக் கண்டுபிடித்துத் தரும்படி சென்னை போலீஸ் கமிஷனரிடமும், முதல்வரின் தனிப் பிரிவிலும் புகார் செய்துள்ளோம். நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்துள்ளோம். பாரிவேந்தரை என் மகன், தெய்வமாக வணங்கினான். பூஜை அறையில்கூட அவரது புகைப்படத்தை வைத்திருந்தான். இதுபற்றிக் கேட்டபோது பாரிவேந்தர் தான் என் தெய்வம் என்று சொல்வான். பாரிவேந்தரிடம் மிகவும் நெருக்கமாக இருந்தது சிலருக்குப் பிடிக்கவில்லை. பாரிவேந்தர், அவரது மகன் ரவி மற்றும் மதன் ஆகியோருக்கு இடையே ஏதோ நடந்துள்ளது. அதுதான் என் மகனின்  மாயத்துக்குக் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். இதுகுறித்து விசாரிப்பதற்காக பாரிவேந்தரை  பார்க்கச் சென்றபோது அவர் வெளியே சென்றுவிட்டதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்தனர்.

ரவிபச்சமுத்துவை பார்க்கச் சென்றபோது, ‘சூழ்நிலை சரியில்லை. அதனால், ரவிபச்சமுத்துவை தற்போது பார்க்க முடியாது’ என்று எங்களை அனுப்பிவிட்டனர். மதன் மிகவும் நல்லவன். அவன் எந்த மோசடியிலும் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இல்லை. அவனுக்கும் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சிக்கும் எஸ்.ஆர்.எம் குழுமத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதில் உண்மை இல்லை.

எஸ்.ஆர்.எம் என்றால் மதன், மதன் என்றால் எஸ்.ஆர்.எம் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அந்த நிறுவனத்துடன் நெருக்கமாக மதன் இருந்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்