கழுகார் பதில்கள்

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.
 ‘உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடத் தயாரா?’ என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தமிழிசை செளந்தர்ராஜன் சவால்விட்டு உள்ளாரே?


 அப்படி எல்லாம் சவால்விடும் நிலையில் வாக்குகள் வாங்கவில்லை பி.ஜே.பி.!

ரேவதிப்ரியன், ஈரோடு-1.
 கடைசி நேரத்தில் அம்மாவிடம் சரண் அடைந்து எம்.பி பதவியை வாங்கிவிட்டாரே எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்?


 சிலருக்குத்தான் அந்த வித்தை தெரியும். சில மாதங்களுக்கு முன் அவர் த.மா.கா-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் சேர்ந்து இருந்தால், ஜெயலலிதா மறந்து இருப்பார். தேர்தலுக்குச் சில நாட்களே உள்ள நிலையில் சேர்ந்ததால், எஸ்.ஆர்.பி-க்கு லக் அடித்துவிட்டது. கொங்கு மண்டல அ.தி.மு.க-வினருக்கு இதில் மகிழ்ச்சி இல்லை. நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், ஊட்டி ஆகிய மாவட்டங்கள் அ.தி.மு.க-வின் கோட்டைகளாக மாறிவிட்டன. இந்த மாவட்டங்களில் தி.மு.க அத்திபூத்தாற்போலத்தான் வென்று உள்ளது. எனவே, அந்த மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க புள்ளி ஒருவருக்கு எம்.பி பதவி கொடுத்து மரியாதை செய்யப்பட்டு இருக்க வேண்டும். அப்படிச் செய்து இருந்தால் கட்சியினர் உற்சாகம் அடைந்து இருப்பார்கள் என்கிறார்கள்.

கே.பொன்முடி, விழுப்புரம்.
  தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு திராவிடக் கட்சி களுக்கு இணையாக மாற்றுக் கட்சி ஒன்று உருவாகிவிடக் கூடாது என்பதில் ஊடகங்கள் கவனமாக இருந்ததாமே?


 இந்த இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் எதிராக நான்கு கூட்டணிகள் களத்தில் இருந்தன. விஜயகாந்த், ஜி.கே.வாசனை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டணி, பி.ஜே.பி கூட்டணி, பா.ம.க அணி, நாம் தமிழர் அணி எனப் போட்டியிட்ட நான்கு அணிகளின் ஒரே இலக்கு திராவிடக் கட்சிகளான
தி.மு.க-வையும் அ.தி.மு.க-வையும் வீழ்த்துவதுதான். இவர்களுக்குள் ஒற்றுமை இருந்திருக்குமானால், அந்த இரண்டு அணிகளுக்குமே பதற்றம் வந்திருக்கும். அந்த ஒருங்கிணைப்பு ஏற்படாமல் போனதற்கு ஊடகங்கள் காரணமா... அந்தந்தக் கட்சிகள் காரணமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்