மிஸ்டர் கழுகு: அதிகாரிகள் களையெடுப்பு! - ஜெ. அதிரடி

லைமைச் செயலகத்தில் இருந்து பறந்து வந்தார் கழுகார்.

‘‘கோட்டையே பரபரப்பில் இருக்கிறது. சில அதிகாரிகளைக் குறிவைத்து நகர்த்துவதையும் கழற்றிவிடுவதையும் பார்த்தால் முதல்வர் ஜெயலலிதா களையெடுப்புப் பணிகளைத் தொடங்கிவிட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது” என்ற பீடிகையுடன் கழுகார் தொடங்கினார்.

‘‘அரசியல் ரீதியாக சில சந்தேகங்கள் ஆட்சி மேலிடத்துக்கு இருக்கிறது. அதனை முதலில் சொல்லிவிடுகிறேன். தேர்தல் முடிவுகள் தி.மு.க-வுக்கு சாதகமாக வரப்போகிறது என்று நினைத்து கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோருடன் பழைய நட்பை புதுப்பிக்க நினைத்தவர்கள் யார் யார் என்று மேலிடம் ஒரு கணக்கெடுப்பைத் தொடங்கி இருக்கிறது. ஒரு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது கணவரைத் தூது அனுப்பினாராம். சீனியர் போலீஸ் அதிகாரி ஒருவர் வாடகை காரில் போய் மு.க.ஸ்டாலினை சந்தித்து அட்வான்ஸ் வாழ்த்துச் சொல்லிவிட்டு வந்தாராம். இப்படிப் போன சிலருக்கு முதல்வர் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பிதழே அனுப்ப​வில்லையாம். போனில் பேசியவர்கள், தூதுவர்களை அனுப்பியவர்கள், வாட்ஸ்அப் மெசேஜ் கொடுத்தவர்கள் என்று இதுவரை 32 அதிகாரிகளை அடையாளம் கண்டுபிடித்து இருக்கிறார்கள். சென்னை மாநகர அதிகாரி ஒருவர், கடைசி நேர தேர்தல் பிரசார சமயத்தில் தமிழக முதல்வருக்கு இணையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மு.க.ஸ்டாலினுக்கு தரும்படி சக அதிகாரிகளிடம் சொன்னாராம்.

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் எனக்கு இந்தப் பதவி, அவருக்கு அந்தப் பதவி என்று சிலர் லிஸ்ட் போட்டுள்ளார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஜாஃபர்சேட் முக்கியத்துவம் பெற்றுவிடக் கூடாது என்பதற்காக அவரைக் காலி செய்ய திருச்சியிலும், கரூரிலும் வேலைபார்த்த தி.மு.க ஆதரவு அதிகாரிகளையும் கண்டுபிடித்துள்ளார்கள். இவர்கள் அனைவரையும் கல்தா பட்டியலுக்கோ, காத்திருப்போர் பட்டியலுக்கோ கொண்டு செல்ல மேலிடம் முடிவு செய்துள்ளதாம்.”

‘‘மற்ற களையெடுப்பு​களுக்குள் வாரும்!”

‘‘அரசின் அதிகார மையமான பதவிகளில் ஒன்று பொதுத்துறை. இதன் செயலாளராக இருந்தவர் ஜதீந்திரநாத் ஸ்வைன். இதே துறையில் கூடுதல் செயலாளர் பதவியில் வசந்தி என்பவரும் அண்டர் செகரட்டரியாக பாலசுப்ரமணியன் என்பவரும் இருந்தார்கள். இவர்கள் மூவரையும் தூக்கி அடித்துவிட்டார் ஜெயலலிதா.”

‘‘என்ன நடந்தது?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்