“காசு கொடுக்காமல் வாங்கிய வாக்குகள்...”

பொங்கிய நாம் தமிழர் பொதுக்குழு

தேர்தல் தோல்விக்குப் பிறகு திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசியவர்கள், ‘‘ஊடகங்கள் திட்டமிட்டு நம்மை மறைத்துவிட்டார்கள். கட்சியின் கட்டமைப்பை இன்னும் சீர்படுத்த வேண்டும். வேட்பாளர்களுக்கு உதவுவதாகச் சொல்லி இணையதளத்தில் தகவல்கள் அனுப்பி நமது கட்சியினர் வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கி மோசடி செய்துவிட்டனர். கடந்த ஐந்து வருடங்களாகக் கட்சியைக் கட்டமைக்காமல் இருந்துவிட்டோம் என்பது தேர்தல் களத்துக்குச் சென்றபோதுதான் தெரிந்தது. பிரசாரத்துக்குப் போனபோது, வெறும் 20 பேர்தான் உடன் இருந்தார்கள். ஒரு வாக்குச்சாவடிக்கு முகவர்களை உருவாக்கும் அளவுக்காவது கட்சியைக் கட்டமைக்க வேண்டும். 5 லட்சம் தூய உள்ளங்கள் நமக்கு வாக்களித்து உள்ளார்கள். இவை அனைத்தும் காசு கொடுக்காமல் வாங்கிய வாக்குகள். இன்னும் மானத்தமிழன் மொத்தமாக விலை போகவில்லை என்பதற்கான எடுத்துக்காட்டு. அடுத்தடுத்தத் தேர்தல்களில் மீண்டும் களம் காண்போம்’’ என முழங்கினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்