தமிழக இளைஞர்கள் சந்திக்கும் சவால்கள்!

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுகள் கடினமா?

ள்ளி, கல்லூரிப் பாடங்களைக் கருத்தூன்றிப் படித்தால் மட்டுமே வேலைக்குரிய தேர்வுகளில் சிறந்த பலனை அடைய முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், மத்திய/மாநில அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுமுறைகள். குறிப்பாக, சிவில் சர்வீஸஸ் தேர்வு மூலம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ் போன்ற பதவிகளுக்கான தேர்வுகள். இதில் இந்தியா முழுவதிலும் இருந்து பலரும் கலந்துகொண்டு, தனக்கோர் இடத்தையும் பிடித்துவிடுகிறார்கள். இருப்பினும், தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை சொற்ப சதவிகிதத்திலேயே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது  உண்மையா? இந்தியக் குடிமைப் பணிப் பதவிகளில் தமிழர்கள் அமர, வளர்த்துக்கொள்ளவேண்டிய தகுதிகள் எவை... ஓர் அலசல்.

போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் டாக்டர் சங்கர சரவணன், “2015-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த பலர் தேர்வாகி உள்ளனர். இது பெருமைப் படவேண்டிய விஷயம். தமிழர்களின் மொழி ஆளுமை தழைத்து இருக்கிறது. பட்டுப்போய் இருந்த தமிழ்வழிக் கல்விக்கான பாடமுறைகள் இன்று பட்டொளி வீசுகின்றன. எந்தப் பாடத்தை எப்போது, எங்கே, எவ்வாறு படிக்க வேண்டும், பாடத்திட்ட முறைகளை எவ்வாறு நெறிப்படுத்த வேண்டும், எந்தெந்தப் புத்தகங்களைப் படிக்க வேண்டும், எந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் அளிக்க வேண்டும் என்பது போன்ற சிந்தனையில் தெளிவாக இருக்கிறார்கள்.

`வட இந்தியப் பல்கலைக்கழங்களில் உள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் சிவில் சர்வீஸ் தேர்வுமுறை அமைந்துள்ளது. தமிழ்நாட்டுப் பாடத்திட்ட முறை, சிவில் சர்வீஸ் தேர்வுமுறைக்கு ஏற்றதாக இல்லை’ என்பது போன்ற பல்வேறுவிதமான காரணங்கள் முன்னர் இருந்தன. ஆனால் இன்று,  இவை அனைத்தையும் சீர்படுத்தி, நம்முடைய முயற்சிக்கு மேலும் மெருகூட்டுவதுபோல பாடத்திட்ட முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அரசு கொண்டு வந்துள்ளது. படிக்க வேண்டும், போட்டியில் தேர்ச்சி அடைய வேண்டும், பதவியில் அமர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே போதாது. அவற்றை அடைவதற்கான கூடுதல் முயற்சியோடு பயிற்சியும் தேவை’’ என்றார்.

கடந்த ஆண்டில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, தற்போது ஐ.ஆர்.எஸ் (Indian Revenue Service) பணிக்கு தேர்வாகி இருக்கும் பூ.கொ.சரவணனிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்