தடையை நீக்குவாரா முதல்வர்?

ஒரு வீராங்கனையின் வேதனைப் பக்கம்!

ந்தியாவின் பெயரைச் சர்வதேச அளவில் தலைநிமிரச் செய்த சாந்தியின் பயணத்தைத் தலைக்குனிய வைத்திருகிறது உலகளாவிய தடகள அமைப்பு. 

புதுக்கோட்டை மாவட்டம் காதக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. இவர், கடந்த 2006-ல் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியாவில் உள்ள அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். வீராங்கனையாக அன்று வெளிச்சத்துக்கு வந்த அவரது கனவு, லட்சியம் எல்லாம் இன்று இருட்டுக்குள் அடைப்பட்டு இருக்கின்றன. வெள்ளி வென்று வெற்றியை ரசிகர்களோடு பகிர்ந்துகொண்ட சாந்திக்கு பாலினப் பிரச்னையால் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டதுடன் அவருடைய பதக்கமும் பறிக்கப்பட்டது. சாந்தியைப் போன்று சர்வதேச அளவில் பதக்கம் வாங்கிய பலரும் பாலினச் சர்ச்சையில் சிக்கி, அவர்கள் வாங்கிய பதக்கங்களைப் பறிகொடுத்ததோடு தொடர்ந்து விளையாடத் தடையும் விதிக்கப்பட்டது. அந்தத் தடைகளை உடைத்து எறிந்து மீண்டும் களத்தில் நிற்கிறார்கள் அவர்கள். ஆனால், சாந்தியின் விஷயத்தில் இது முற்றிலும் வேறுவிதமாக இருக்கிறது. ‘சாந்திக்குத் தடை விதிக்கவில்லை’ எனக் கைவிரிக்கும் இந்திய தடகள அமைப்பு, தகவல் உரிமைச் சட்டத்தின்படி சாந்திக்கு செய்த பாலின பரிசோதனையின் முடிவுகளைப் பலமுறை கேட்டும் அதை வெளியிடாமல் மறைத்துவைத்திருக்கிறது. பரிசோதனை முடிவுகள் மட்டும் அல்ல; பரிசுகளும் முடங்கிக் கிடங்கின்றன. இது சாந்திக்கு மட்டும் செய்யும் துரோகம் அல்ல... தமிழகத்துக்குச் செய்யும் துரோகமாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்