“ ‘கபாலி’ வெற்றி விழாவில் ரசிகர்களை சந்திப்பேன்!”

ரஜினி உறுதி!புதுசு

‘கபாலி’ இன்னும் சில நாட்களில் சூறாவளி கிளப்பப் போகிறது. படத்தைப் பற்றிய கடைசிகட்ட பரபர தகவல்கள் இங்கே... 

தமிழில் டபுள் பாசிட்டிவ் பார்த்த ரஜினி உற்சாகமாக டப்பிங் பேசிவிட்டு அமெரிக்கா பறந்துவிட்டார். தெலுங்கில் ரஜினி குரலில் பாடகர் மனோ பேசியிருக்கிறார். இந்தியில் டப்பிங் பேசும் வேலைகள் பரபரப்பாக நடக்கின்றன. இந்தியில் வெளியான ‘சிவாஜி’, ‘எந்திரன்’ படங்களில் ரஜினிக்கு டப்பிங் பேசிய மயூர் வியாஸ் ‘கபாலி’யில் பேசி வருகிறார்.

ஜூன் 12-ம் தேதி காலை 11.06 மணிக்கு 35 செகண்ட் ஓடக்கூடிய டீஸர் வெளியாகிறது. அடுத்து ‘கபாலி’ இசை வெளியீடு இன்டர்நெட்டில் நடக்கிறது. ‘கபாலி’ படத்தின் பாடல்கள் ஆடியோவில் ஒலிக்க... திரையில் ‘கபாலி’ படத்தில் உள்ள ரஜினியின் போட்டோக்கள் இடம்பெறும்.

தமிழில் முதல் பிரின்ட் தயாராகிவிட்டது. தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ தாணு, முழுப் படத்தையும் பார்த்துவிட்டார். திரையில் இரண்டரை மணிநேரம் ஓடும் ‘கபாலி’யைப் பார்த்துவிட்டு வெளிவந்த தாணு, ‘‘ஒரு காட்சியைக்கூட வெட்ட வேண்டாம்” என்று ரஞ்சித்துக்கு அன்புக்கட்டளை போட்டு இருக்கிறார்.

மே மாதம் 21-ம் தேதி வெளிநாடு சென்ற ரஜினி இன்றுவரை திரும்பவில்லை. ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதைத் தவிர்க்கிறார் என்பதாகப் பேச்சு. தன் மனசுக்கு நெருக்கமான புள்ளி ஒருவரிடம், ‘‘ஏற்கெனவே வந்த ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ படங்கள் பெரிசா போகலை. ‘கபாலி’ நிச்சயமா ஜெயிக்கும். அதுக்கப்புறம் கண்டிப்பா என்னோட ரசிகர்களைச் சந்திப்பேன்” என்று மனம் நெகிழ்ந்துபோய் சொல்லி இருக்கிறார், ரஜினி.

- எம்.குணா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்