மிஸ்டர் மியாவ்: ஆந்திர பந்தம்!

சினிமா

விஜய்யின் ‘தெறி’ படத்தில் மகேந்திரன் வேஷத்துக்கு நடிக்க அழைத்தபோது ‘நோ’ சொன்ன பாரதிராஜா, இப்போது ‘குரங்கு பொம்மை’ படத்தில் விதார்த்துக்கு அப்பாவாக நடிக்க ‘எஸ்’ சொல்லி இருக்கிறார். வில்லன் கேரக்டரில் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவர்
பி.எல்.தேனப்பன் நடிக்கிறார்.

கேரளாவைச் சேர்ந்த விஜய் ரசிகர் அவர். கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையை இழந்து வருகிறார். பார்வையை இழப்பதற்குள் விஜய்யை ஒரு தடவை நேரில் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். அதைக் கேள்விப்பட்ட விஜய், அவரை அழைத்து அவருடன் போட்டோ எடுத்து மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறார்.

சூப்பர் ஸ்டாரின் கபாலியில் நடித்துள்ள ராதிகா ஆப்தேவுக்கு இந்தியின் முன்னணி இயக்குநர்கள் சிலரிடமிருந்தும் அழைப்பு வந்திருக்கிறதாம். நாயகியை மையப்படுத்திய கதையொன்றில் நடிக்க, இயக்குநர் மதுர் பண்டார்கர் அவரை அணுகியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்