மிஸ்டர் மியாவ்

சினிமா

விஜய்சேதுபதிக்கு சுக்ர திசை. உடம்பு முழுக்க மச்சம். இப்போது நயன்தாரா காதலன் லிஸ்ட்டில் இருக்கும் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படம், ‘காத்து வாக்குல இரண்டு காதல்’. இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு இரண்டு ஜோடி. ஒன்று நயன்தாரா, இன்னொன்று திரிஷா. விஜய்சேதுபதியுடன் மைசூரில் படப்பிடிப்பில் இருக்கிறார் நயன்தாரா.

‘பாகுபலி’ மாதிரி சரித்திரப் படம் எடுக்க சபதம் எடுத்து இருக்கிறார், சுந்தர்.சி. மன்னர் அசோகரின் மகள் பெயரான, ‘சங்கமித்ரா’தான் பட டைட்டில். தீபிகா படுகோன் கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கிறார். ‘சங்கமித்ரா’வை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிப்பது சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரித்த ராம நாராயணன் மகன், முரளி. ராஜஸ்தான் அரண்மனைகளில் படப்பிடிப்பு நடக்கிறது. 

ஆணாதிக்கம் கொண்ட நடிகர்களைக்
கண்டால் சீறி எழுவார் ராதிகா ஆப்தே. ‘‘தென்னிந்திய சினிமாவுல நடிகைகளுக்கு பாதுகாப்பே இல்லை’’ என்று ஆப்தே ஆவேசமாய் சீறியவர், ‘‘ஆனா ‘கபாலி’ படத்துல எனக்கு மனசுல நிக்கிற கேரக்டர். ரஜினி சார் தங்கம்னா தங்கம்” என்று ஜகா வாங்கினார்.

‘சாக்லெட்’ படத்தில் மும்தாஜை ‘மல மல மருதமலை’ என்று பக்திப் பாடலுக்கு ஆடவைத்த டைரக்டர் மாதேஷ் படத்தில் திரிஷா நடிக்கிறார். பீதியைக் கிளப்பும் பேய்க் கதையின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றுள்ள திரிஷாவின் அழகான முகத்தில் பேய் மேக்கப் போட்டு பயமுறுத்தி இருக்கிறார்கள்.

ஒரு கோடி செலவில் உருவான ‘யூடர்ன்’ திரைப்படம்
கன்னடத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் மெளனமாக ஓடி கனமாகக் கல்லா கட்டியது. தமிழ், தெலுங்கு உரிமையை சமந்தா வாங்கி இருக்கிறார். தமிழ், தெலுங்கு இரண்டிலும் அவரே முக்கியமான கேரக்டரில் நடித்து சின்ன பட்ஜெட்டில் படத்தைத் தயாரிக்கிறார், சமந்தா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்