அமைச்சர் தொகுதியில் அழகு இழந்த அகமலை!

கண்டுகொள்ளாத தமிழக அரசுஅவலம்

மைச்சரின் தொகுதியிலேயே ஒரு கிராமம், அழகு இழந்து இருக்கிறது என்பது வேதனையான விஷயம். அதிலும், குறிப்பாக நிதித்துறையோடு உறவாடிக்கொண்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியிலா இப்படி ஒரு கிராமம் இருக்கிறது என்பது இன்னும் ஆச்சர்யமாக இருக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் மிகவும் ரம்யமான இயற்கை காட்சிகளைக் கொண்டது அகமலை. இது, போடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது. ஓ.பி.எஸ்-ஸின் சொந்தத் தொகுதி. அகமலையில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

அகமலையைச் சுற்றிலும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, பல்வேறு விளைபொருட்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்த விளைபொருட்களுக்கு தமிழகம் முழுவதும் தனி மவுசு உள்ளது. அகமலைக்குச் செல்ல 2 வழிகள் உள்ளன. ஒன்று, போடியில் இருந்து உலகுருட்டி சாலை வழியாகச் செல்லும் மலைப்பாதை. மற்றொன்று, பெரியகுளத்தில் இருந்து சோத்துப்பாறை வழியாகச் செல்லும் சாலை. இந்தச் சாலை மிகவும் மோசமாக உள்ளதால், தனியார் ஜீப்கள் மட்டும் சோத்துப்பாறையில் இருந்து அகமலைக்குச் சென்று வருகின்றன. ஜீப் வசதிகூட அகமலை வரை செல்லவில்லை. இடையில் நிறுத்தப்படுகின்றன. அடர்ந்த வனப் பகுதிகள்அதிகம் இருப்பதாலும் அரசின் அலட்சியத்தாலும் இந்தப் பாதையில் செல்ல வனத் துறையினர் தடை விதித்து உள்ளனர். அகமலைக்கு ஜீப் மூலமாகக் கொண்டு செல்லப்படும் பொருட்கள் இடையில் இறக்கப்பட்டு அனைத்தும் குதிரைகள் மூலமாகவே எடுத்துச் செல்லப்படுகின்றன. அகமலையில் நடுநிலைப் பள்ளி மட்டுமே உள்ளது. அந்தப் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களும் காலை 8 மணிக்கு வந்து மாலை 3 மணிக்கெல்லாம் வீட்டுக்குச் சென்றுவிடுகின்றனர். இங்குள்ள குழந்தைகள் எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க வேண்டும் என்றால், பெரியகுளம் பகுதிக்குத்தான் செல்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்