“காசு கொடுத்தால்தான் ஸ்ட்ரெட்சர் தள்ளுவேன்!”

உயிரை காவு வாங்கிய லஞ்சம்... ஊழல் நோயில் அரசு மருத்துவமனைகள்!துயரம்

யக்குநர் ஷங்கரின் ‘இந்தியன்’ திரைப்படத்தில் ஒரு காட்சி. அரசு மருத்துவமனையில் ஒருவர் உயிருக்குப் போராடிக்கொண்டு இருப்பார். ‘லஞ்சம் கொடுத்தால்தான் சிகிச்சை அளிப்பேன்’ என்று டாக்டர் சொல்வார். கடைசியில், மருத்துவரின் கல்நெஞ்சத்தால் அந்த நோயாளி இறந்துவிடுவார். அந்தக் காட்சியைக் காணும் பார்வையாளர்களுக்கு ரத்தம் கொதிக்கும். அதைப்போல, நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் ஒன்று, மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடந்துள்ளது.

மதுரை புதூர் ஏரியாவைச் சேர்ந்தவர் கணபதி. தட்டச்சு வேலை செய்யும் கணபதிக்கு இரண்டு பெண்கள். ராஜேந்திர பிரசாத் என்று ஒரு மகன். 18 வயதான ராஜேந்திர பிரசாத்துக்கு கடந்த மே மாதம் 2-ம் தேதி அன்று வலிப்பு ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸுக்கு போன்செய்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்குதான் அந்தக் கொடூரம் அரங்கேறியுள்ளது.  

தனது ஒரே மகனை இழந்த துயரத்தில் இருந்தார் கணபதி. அவரிடம், என்ன நடந்தது என்று கேட்டோம்.

“மருத்துவமனைக்குப் போனதும் உடனடியாக அவசரச் சிகிச்சை வெளிநோயாளிகள் பிரிவுக்குக் கொண்டுபோகச் சொன்னார்கள். அங்கு முறையான சிகிச்சை அளிக்காமல், ‘அவசரச் சிகிச்சைப் பிரிவு உள்நோயாளிகள் பிரிவுக்குக் கொண்டு போ’ என்று அங்கிருந்த மருத்துவர் சீட்டு எழுதிக்கொடுத்தார். என் மகனை ஸ்ட்ரெட்சரில் ஏற்றினோம். ஸ்ட்ரெட்சர் தள்ளும் ஒரு நபரை எங்களுடன் கூடவே அனுப்பிவைத்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்