“2 அடி ஆழம் தூர்வாரினாலே ஏராளமான நீரை சேமிக்கலாம்!”

முன்னெச்சரிக்கையில் தமிழக அரசு!அலசல்

ழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது தமிழக அரசு. இது நல்ல அறிகுறிகளில் ஒன்று!

கேரளாவில் அண்மையில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. அதன் அறிகுறியாகக் கடந்த வாரம் சென்னையில் இரண்டு நாட்கள் பெய்த மழைக்கே மாநகரில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த ஆண்டின் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழையின் பிடியில் சிக்கித்தவித்த வேதனைகளை எல்லாம் சென்னை மக்கள் நினைத்துப் பார்த்து பீதியில் ஆழ்ந்தனர். மீண்டும் அப்படி ஒரு பாதிப்பில் சென்னை தவிக்கக் கூடாது என்பதில் தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறது. சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் கூடுதல் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும், வடிகால்களில் அடைப்புகளை நீக்கவும், மழைநீரை அப்புறப்படுத்தவும் அனைத்துப் பகுதிகளிலும் உறிஞ்சும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்