கழுகார் பதில்கள்

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.
நடிகர் வடிவேலு புதுக்கட்சி தொடங்கப் போவதாகச் சொல்கிறார்களே? உண்மையா?


அவர் இப்போதே சிரிப்புக் கட்சி தொடங்கி நடத்திக்கொண்டுதானே இருக்கிறார்!?

உமரி.பொ.கணேசன், மும்பை-37.
பதவி கொடுப்பதும், பறிப்பதும் அ.தி.மு.க-வில் உடனடியாக நடக்கிறது. இது மற்றக் கட்சிகளில் தாமதம் ஏன்?


அங்கே, ஜெயலலிதா வைத்ததுதான் சட்டம். அதனால், அவர் நினைத்தால் யாரையும் நீக்கலாம்; நியமிக்கலாம். மற்றக் கட்சிகளில் ஒன்றிரண்டு பேராவது ஒரு விஷயத்தில் ஒத்துப்போக வேண்டி உள்ளது.

தி.மு.க-வில், கருணாநிதி நினைத்ததைச் செய்ய முடியாது. ஸ்டாலின் சம்மதமும் தேவைப்படுகிறது. எனவேதான், அ.தி.மு.க-வில் உயர்வும் தாழ்வும் உடனடியாக நடந்துவிடுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்