மிஸ்டர் கழுகு: மாவட்டச் செயலாளர்களுக்கு கல்தா! - தி.மு.க-வில் கொந்தளிப்பு

‘‘அறிவாலயம் வட்டாரத்தில் இருக்கிறேன். அரைமணி நேரத்தில் வருகிறேன்” என்று வாட்ஸ் அப் மேசேஜ் அனுப்பிய மாதிரியே வந்தும் சேர்ந்தார் கழுகார்.

‘‘தேர்தல் தோல்வி குறித்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் கருணாநிதியும், ஸ்டாலினும் நடத்திய கலந்துரையாடலை இரண்டு வாரங்களுக்கு முன்பு சொன்னேன் அல்லவா? முன்பு எல்லாம் இப்படிப் பேசிவிட்டுக் கலைந்துவிடுவார்கள். ஆனால், இந்தத் தடவை, நடவடிக்கைப் படலத்தில் இறங்கிவிட்டார்கள். இதனைக் கட்சி நிர்வாகிகள் பலரும் எதிர்பார்க்க​வில்லை!”

‘‘இவ்வளவு பட்டவர்த்தனமாகவும் இதுவரை யாரும் பேசியதும் இல்லை அல்லவா?”

‘‘பிள்ளையார் சுழி போட்டவரே திருப்பூர் மாவட்டச் செயலாளர் செல்வராஜ்தான். அவர் மீது யாரும் புகார் சொல்லவில்லை. அவரேகூட தேர்தலில் நின்று தோற்றவர்தான். மேற்கு மண்டலமே தி.மு.க-வின் காலை வாரிவிட்டது அல்லவா? அதற்கு தார்மிகப் பொறுப்பு ஏற்று செல்வராஜ் ராஜினாமா கடிதத்தைக் கட்சி மேலிடத்துக்குக் கொடுத்தார். இதைக் கேள்விப்பட்ட மற்ற தொகுதிகளில் தோற்றவர்கள், ‘அவரே கடிதம் கொடுத்திருக்கிறாரே? நம்மளைத் தோற்கடித்த மாவட்டச் செயலாளர் உள்ளடி வேலை பார்த்துவிட்டு, ஏதும் நடக்காத மாதிரி திரிகிறாரே?’ என்கிற கோபத்தில் புகார் கடிதங்களை அனுப்ப ஆரம்பித்தனர். அத்தோடு, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் நின்று தோற்றவர்கள் அனைவரும் ஆங்காங்கே உள்ள தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் நிர்வாகிகள் எப்படியெல்லாம் உள்ளடி வேலை பார்த்தார்கள் என்பதைத் தனியாகப் புகார் அனுப்பினர். இப்படித்தான் அறிவாலயத்தின் அறைகளில் மூட்டை மூட்டையாகப் புகார் கடிதங்கள் குவிந்தன.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்