அச்சந்த சரத்கமல்!

முகங்கள்

ச்சந்த சரத்கமல் - டேபிள் டென்னிஸ் வீரர். இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் விளையாடப் போகும் தமிழர். விளையாட்டுத் துறையில் சாதிக்கக் காத்திருக்கும் ஒவ்வொரு வீரனுக்கும் ஒலிம்பிக் என்கிற வார்த்தையே ஒரு எனர்ஜி பூஸ்ட். இந்தமுறை சரத்கமலுக்கு இது மூன்றாவது பூஸ்ட். வெற்றிக்கனிக்காகத் தொடர்ந்து பயிற்சிகளில் இருப்பவரிடம் பேசினோம்.

‘‘டேபிள் டென்னிஸ் உங்களை எப்படி வசீகரித்தது?”

‘‘அப்பா சீனிவாச ராவ், சித்தப்பா முரளிதர் ராவ் இருவருமே டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர்கள். இந்தியா சார்பாக பல வீரர்களை உருவாக்கியவர்கள். அதனால் இயல்பிலேயே எனக்கு டேபிள் டென்னிஸ் மீது காதல் இருந்தது. நாலு வயதில் விளையாட ஆரம்பித்து 22-வது வயதில் நான் இந்திய சாம்பியனாகி இருந்தேன். இப்போது வரை டேபிள் டென்னிஸ் மட்டும்தான் எனது மூச்சு. இதுவரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் பலவற்றில் பதக்கம் வென்று இருக்கிறேன். இது எனது மூன்றாவது ஒலிம்பிக் போட்டி. கடந்த போட்டிகளைவிட இந்தமுறை சிறப்பாகப் பயிற்சி செய்துவருகிறேன்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்