மிரட்டும் சிலை கடத்தல் மாஃபியா!

போலீஸாருக்கு சவால் விடும் போலி ஆவணங்கள்...

சிவன், விஷ்ணு என இந்து மதக் கடவுள்களின் சிலைகள் கடத்தப்பட்டு, அவற்றைச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ள சம்பவங்கள்தான் இதுவரை நடந்துள்ளன. இப்போது முதன்முறையாக, பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஏசுநாதரின் சிலையை போலீஸார் கைப்பற்றி இருக்கிறார்கள்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆர்ட் கேலரியுடன் இணைந்த வீடு மற்றும் இரண்டு கிடங்குகள் என மூன்று இடங்களில் இருந்து பழங்காலத்தைச் சேர்ந்த 71 கற்சிலைகள், 50 உலோகச் சிலைகள், 51 தேர் மரச் சிற்பங்கள், 42 பழமையான ஓவியங்கள் ஆகியவற்றைச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைப்பற்றியுள்ளனர். சிலை கடத்தல் தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியான தீனதயாளன், தாமாகவே போலீஸில் சரணடைந்து விட்டார்.

கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் வெளிநாட்டு அருங்காட்சி யகங்களில், இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 2,913 பழமையான சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. யுனெஸ்கோ அமைப்பு, ‘1989-ம் ஆண்டு இறுதிக் கணக்குப்படி மட்டுமே, 50 ஆயிரத்துக்கும் மேலான இந்திய சிலைகள் கொள்ளை போயிருக்கலாம்’ என 2011-ம் ஆண்டில் கணக்கிட்டுச் சொன்னது. இந்தியாவில் 1950-களில் தொடங்கி ஒவ்வொரு பத்தாண்டுக் காலத்திலும் கடத்தப்பட்ட சிலைகளின் எண்ணிக்கை 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இருக்கும். இதன் மதிப்பு மட்டுமே ரூ.20 ஆயிரம் கோடி ரூபாய். இந்தியாவில் உள்ள 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பழமையான சிலைகள் மற்றும் கலைப் பொருட்களில் 13 லட்சம் சிலைகள் மட்டுமே உரிய முறையில் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்