570 கோடி யாருக்குச் சொந்தம்?

தி.மு.க. நடத்தும் நீதிமன்ற யுத்தம்!அலசல்

மிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2016, பல கண்கட்டி வித்தைகளைப் பொதுமக்களுக்குக் காட்டிச் சென்றுள்ளது. அவற்றில் சில வித்தைகள், விடை தெரியாத விநோதங்களாக இன்னும் நீடிக்கின்றன. கரூர் தொழிலதிபர் அன்புநாதன் வீட்டில் சிக்கிய பணம் எவ்வளவு? அன்புநாதனுக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? திடீரென சிறுதாவூரில் 18 கன்டெய்னர்கள் ஏன் நின்றன... அதில், என்ன இருந்தன? அதன்பிறகு, அவை எங்கே மாயமாக மறைந்தன? திருப்பூரில் ரூ.570 கோடிகளுடன் வந்த 3 கன்டெய்னர்கள் யாருடையவை? அந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி இதுவரை ஏன் வாய் திறக்கவில்லை என்பன எல்லாம் அப்படிப்பட்ட விடை தெரியாத விநோதங்கள்.

டகங்கள், போலீஸ், அரசு அதிகாரிகள், வங்கி விதிமுறைகள், நீதிமன்றங்கள் என அத்தனை பேரின் கண்களையும் கட்டிவிட்டு நிகழ்த்தப்பட்ட இந்த விநோதங்களை விசித்திர விநோதங்கள் என்று நாம் வகைப் படுத்தலாம். இவற்றில், 570 கோடி ரூபாய் விவகாரத்தை  தி.மு.க கொஞ்சம் சீரியஸாகக் கையில் எடுத்தது. சர்ச்சைகள் எழுந்தபிறகு, அவை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்குச் சொந்தமானது என்று அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக உத்தரவுகள் பறந்துவந்தன. பணம் போக வேண்டிய இடத்துக்குப் போய்விட்டது. ஆனால், இதுவரை அந்தப் பணம் ஏன் வந்தது? எதற்கு வந்தது? அவை யாருக்குச் சொந்தமானது என்பது போன்ற பல கேள்விகளுக்குப் பதில்கள் இல்லை.

தி.மு.க தலைமை நிலையச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன், இதற்குப் பதில் தேடி, சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி உள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் அனைத்தும் அதிர்ச்சி ரகமாக உள்ளன.

1. கடந்த மே 13-ம் தேதி நடு இரவில், தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது, 3 இன்னோவா கார்கள் பின்தொடர்ந்து வர, 3 கன்டெய்னர் லாரிகளில் கோடிக்கணக்கான பணம் சென்றது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்குச் சொந்தமான பணம் என்றால், தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் நிறுத்தியபோது, அந்த லாரிகளை ஏன் அவர்கள் நிறுத்தவில்லை?

2. பெருமாநல்லூர் - குன்னத்தூர் சாலையில் பிடிபட்ட அந்த லாரிகளில், மூன்று நாட்களாக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தன. 18 மணி நேரம்வரை அந்தப் பணத்துக்கு யாரும் உரிமை கோரவில்லை. 

3. இந்த 570 கோடி ரூபாய் பணத்தை அனுப்பும்போது, வங்கி அதிகாரிகள் அல்லது வங்கி சார்பில் யாரும் அந்த லாரிகளிலும் அவற்றுடன் வந்த இன்னோவா கார்களிலும் ஏன் வரவில்லை?

4. தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள், அந்தப் பணம் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு லாரிகளில் இருந்தவர்கள், இன்னோவா காரில் வந்தவர்கள் யாரும் எந்தப் பதிலும் சொல்லவில்லை. பணம் யாருடையது? எங்கிருந்து வருகிறது என்று கேட்டபோது, அவர்கள் யாரும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் பணம் என்று அப்போது சொல்லவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்