கழுகார் பதில்கள்

சம்பத்குமாரி, பொன்மலை.
‘கிங்’, ‘கிங்மேக்கர்’ இருவரும் கடைசியில் ஜோக்கர் ஆகிவிட்டார்களே?


ரொம்பவும் நோகடிக்கக் கூடாது.

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் பிடிபடுவதும், இந்தியப் பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம் எழுதுவதும் இன்னும் எத்தனை நாளைக்குத் தொடரும்?


மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, மோடி பேசியதுதான் நினைவுக்கு வருகிறது. ‘இந்தியாவை ஆள்பவர் மீது இலங்கைக்குப் பயம் இல்லை. அதனால்தான் நம்முடைய மீனவர்களை இலங்கை கடத்துகிறது’ என்று கர்ஜித்தார். இன்றும் அந்த நிலைமை மாறவில்லை என்றால், என்ன அர்த்தம்? மன்மோகன் சிங் ஆட்சி மாதிரித்தான் மோடி ஆட்சியையும் இலங்கை நினைக்கிறது.

இதே சூழ்நிலையில் மன்மோகன் சிங்குக்கு அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார். அப்போது ஜெயலலிதா, ‘கடிதம் எழுதினால் போதுமா? கடிதம் அனுப்பினால் மீனவர்கள் வந்துவிடுவார்களா?’ என்று கேட்டார். இன்று, அவரும் கடிதம் எழுதியதைத் தாண்டி எதுவும் செய்யவில்லை. கருணாநிதி ஆட்சி மாதிரித்தான் ஜெயலலிதா ஆட்சியும் இருக்கிறது.

இங்குதான் இப்படி என்றால், இலங்கையிலும் ஆட்சி மாற்றம் நடந்துவிட்டது. ராஜபக்‌ஷே போய், மைத்ரிபால சிறிசேன வந்துவிட்டார். மீனவர் கடத்தல் மட்டும் ஓயவில்லை.

‘கடல் மேல் பிறக்கவைத்தான் எங்களைக் கண்ணீரில் மிதக்கவைத்தான்’ என்ற பாட்டு மட்டும்தான் அழியாத காவியமாக ஒலிக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்