மிஸ்டர் கழுகு: அமெரிக்கா? சிங்கப்பூர்?

புதிய அ.தி.மு.க அரசின் முதல் சட்டமன்றத் தொடர் தொடங்கிய நாளன்று சட்டசபையை ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வந்தார் கழுகார்.

‘‘முதல்நாள் வெளிநடப்புகள் இல்லை போல?” என்ற கேள்வியுடன் கழுகாரைத் தூண்டினோம்.

‘‘ஆமாம். முதல் நாள் அமைதியாக நடந்து முடிந்தது. சட்டசபையில் கவர்னர் பேசியபோது, ‘ஆக்கப்பூர்வமான ஆரோக்கியமான விவாதங்கள் மூலம் மக்களாட்சியின் மாண்பினை அதன் உச்சத்துக்கு எடுத்துச் செல்லும் மாபெரும் பொறுப்பு இந்த மாமன்றத்துக்கு உண்டு. இதனை மனதில் கொண்டு இந்தப் பேரவை பல முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதங்கள் செய்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் முன்னோடித் திட்டங்களை வகுக்கும் என நான் நம்புகிறேன்’ என்றவர், ‘மாநில மக்களின் எதிர்பார்ப்புகளையும், கனவுகளையும் நிறைவுசெய்ய மேற்கொள்ளும் முயற்சிகளில் நீங்கள் வெற்றிபெற வேண்டும்’ என்று சபைக்கு வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார்.”

‘‘ம்!”

‘‘அவரது உரையில் மாண்புமிகு முதல்வர் என்றுதான் ஆங்கிலத்தில்  இருக்கிறது. அதைத் தமிழில் வாசித்த சபாநாயகர் தனபால், ‘மாண்புமிகு முதல்வர் அம்மா’ என்று சொல்லித் தனது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார்.”

‘‘இருக்கத்தானே செய்யும்!”

‘‘சட்டமன்றக் கூட்டம் நடந்த முதல்நாள், அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்களுக்கு தி.மு.க-வின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும், பிரச்னைகளை எப்படி விவாதம் செய்ய வேண்டும்  என்பது போன்றவற்றைப் பற்றி துரைமுருகன் வகுப்பு எடுத்தார். இதற்கு கருணாநிதி வரவில்லை. அவருக்கு காய்ச்சல் என்றார்கள். தி.மு.க செயற்குழுவுக்குத் தாமதமாக வந்து ஸ்டாலின் பிரச்னை செய்தார் அல்லவா? அதைப்போல எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்துக்கு வராமல் கருணாநிதி பாய்காட் செய்தார். அப்பாவுக்கும் மகனுக்கும் மோதல் தொடர்கிறது என்றுதான் சொல்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், ‘நீங்கள் 89 பேரில் 40 பேர் புதிதாக வெற்றி பெற்று வந்துள்ளீர்கள். முதலமைச்சரைப் பார்த்து அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் பயந்து நடிப்பார்கள். அதைப் பார்த்து நீங்கள் பயந்துவிடாதீர்கள். உங்கள் தொகுதிப் பிரச்னைகள், தொகுதிக்குத் தேவையான திட்டங்கள், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எந்த நிலைமையில் உள்ளன என்பது பற்றி எல்லாம் தெளிவாகக் கேள்வி கேளுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார். அதன்பிறகு  தமிழக சட்டமன்ற முன்னாள் செயலாளர் செல்வராஜ் வகுப்பு எடுத்துள்ளார். சட்டமன்ற விதிகள், அங்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படிப் பேசவேண்டும், சபைக்குக் கேள்விகள் அனுப்புவது போன்றவை பற்றி நீண்ட விளக்கங்கள் அளித்தார்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்