பச்சை சால்வை கொடுத்து... பணம் கேட்ட முதல்வர்!

நிதி அமைச்சர் மிஸ்ஸிங்அலசல்

மூன்று ஆண்டுகளில் மூன்றாவது முறையாகப் பிரதமரும், தமிழக முதல்வரும் சந்தித்து உள்ளனர். அ.தி.மு.க-வுக்கும், பி.ஜே.பி-க்கும் இடையே நடைபெற்று வரும் மறைமுக அரசியல் விளையாட்டுகளை, ஜெயலலிதாவின் டெல்லிப் பயணம் வெட்டவெளிச்சம் ஆக்கியுள்ளது. உடல்நிலையைக் காரணம் காட்டி, கடந்த காலங்களில் டெல்லிப் பயணங்களைத் தவிர்த்து வந்தார் முதல்வர். மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டாலும், தமிழகத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களுக்கும், தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ள திட்டங்களுக்கும் தேவையான நிதி அரசிடம் இல்லை. மத்திய அரசு கருணை காட்டாவிட்டால், தமிழக அரசின் நிதிநிலை மோசம் ஆகிவிடும் என்று உணர்ந்ததால்தான் டெல்லிப் பயணத் திட்டத்தைக் கையில் எடுத்தார் முதல்வர். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று வெளியே செய்திகள் பரவினாலும் இரண்டு தரப்பிலும், இந்தச் சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்