மிட்டாய் கடை

லந்து மிட்டாய்

க்காளி ஒரு கிலோ 100 ரூபாயாம். இந்த நிலை தொடர்ந்தால், நாம் எவற்றையெல்லாம் இழப்போம் தெரியுமா?

இனி ஒரு பிளேட் ஃபிரைட் ரைஸுக்கு நாலு டப்பா தக்காளி சாஸை ஊற்றி அடிப்பதெல்லாம் நடக்கவே நடக்காது. கடைகளில் காலி தக்காளி சாஸ் பாட்டிலை கல்லாப்பெட்டி மேல் வைத்திருப்பார்கள். அதை வெறிக்க வெறிக்கப் பார்த்து ஃபிரைட் ரைஸை உள்ளே தள்ள வேண்டியதுதான்.
இனி நாம் யாரையும் ‘போடா என் டொமாட்டோ, போடா தக்காளி மண்டையா’ எனத் திட்ட முடியாது. நாம் அவர்களைப் பாராட்டுகிறோம் என நினைத்து பல்லைக்காட்டிக் கொண்டிருப்பார்கள். ‘நான் உங்களைத் திட்டிட்டு இருக்கேன் பாஸ்’ என நாம் அவர்கள் காலில் விழுந்து கதறினாலும் நம்ப மாட்டார்கள்.

நம் தட்டில் கிடக்கும் தக்காளித் துண்டை, நம் உடன்பிறந்தவர்கள் தட்டில் அவர்களுக்கே தெரியாமல் எடுத்துப்போட்டு, ‘அம்மா, தக்காளியை வேஸ்ட் பண்றான்’ என நம் அம்மாவிடம் பற்றவைத்து அவர்களுக்கு அடிவாங்கி கொடுத்திருப்போம். அந்தச் சந்தோஷமெல்லாம் இனி கிடைக்கவே கிடைக்காது என நினைக்கும்போதுதான் மனசு கிடந்து தவிக்குது.

வீட்டில் வளர்க்கும் கிளிக்கு, கடைக்குச் சென்று வாழைப்பழம் வாங்கிவந்து போடச் சங்கடப்படும் வாழைப்பழச் சோம்பேறிகள் நாம். அதனாலேயே, வீட்டில் இருக்கும் தக்காளிகளை இருதுண்டாய் வெட்டி, கிளிக்குச் சாப்பிடக் கொடுத்திருப்போம். ஆனால், இப்போதும் அதே நினைப்பில் தக்காளி மீது கைவைத்தால் முதல் டெட்பாடி நாமதான்.

வெரைட்டி ரைஸ் வரிசையில் இனி தக்காளி சாதம் டிராப் அவுட் ஆகியிருக்கும். தக்காளி சாதத்தில் முட்டையைப் பதித்துவைத்துப் பிரியாணி போல் ஃபீல் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், இனி பிரியாணியை தக்காளி சாதம் என ஃபீல் செய்து சாப்பிடும் நிலை வரும்.

நம் அம்மாக்கள் ‘தக்காளிக்குப் பதிலாக இனி புளியைதான்டா புளிப்புக்குக் கரைச்சு ஊத்தணும்’ என நம் வயிற்றில் புளியைக் கரைப்பார்கள். ஸ்பெயினில் நடக்கும் தக்காளிச் சண்டை திருவிழாவைப் பார்க்கும்போது நம் கண்கள் வியர்க்கும்.

காது ஜவ்வை, கிழிக்கும் பாட்டுக் கச்சேரிகளிலும் மொக்கை பொதுக்கூட்டங்களிலும் தக்காளியைவிட்டு அடிக்கும் சம்பவங்களைப் பார்த்த கடைசித் தலைமுறை நாமளாதான் இருக்கும். இதெல்லாம் நினைக்கும்போதே மனசு கிடந்து தவிக்குது, முதல் வேளையா கடனை உடனை வாங்கியாவது ஒரு கிலோ தக்காளி வாங்கிச் சாப்பிடணும்.

- ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்