ஆர்.டி.ஐ. ஆர்வலரை கொலை செய்ய ரூ.25 லட்சம் அட்வான்ஸ்!

கூலிப்படையின் கொட்டம் அடக்கப்படுமா?குற்றம்

சென்னை செளகார்பேட்டையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான பாரஸ்மல் என்பவரை கொலை செய்வதற்காக, கூலிப்படைக்கு 25 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ) விதிகளின்படி, சென்னையில் குறிப்பிட்ட இடங்களில் இரண்டு மாடிகளுக்கு மேல் யாரும் கட்டடங்கள் கட்டக் கூடாது.

இந்த விதிமுறைகளை மீறி, சென்னை பூக்கடைப் பகுதியில் பல இடங்களில் ஆறு மாடிக் கட்டடங்கள்கூடக் கட்டப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, செளகார்பேட்டையைச் சேர்ந்த பாரஸ்மல் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்களைத் திரட்டினார். தகவல்களின் அடிப்படையில் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சி.எம்.டி.ஏ-விடம் புகார் அளித்தார். இதனால் விதிமுறைமீறி கட்டப்பட்ட கட்டடங்களின் பணிகள் பாதியில் நின்றன. இந்த நிலையில்தான், பாரஸ்மல் கடந்த ஜூலை 7-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்