தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் - விமர்சனம்

டி.கே.இரவீந்திரன்

ளப்பிரர்கள் காலம் இருண்டகாலம் என்று எல்லோரும் சொல்வார் கள். இது எந்த அளவுக்கு வந்துள்ளது என்றால், மிக மோசமான ஆட்சியை, ‘இது களப்பிரர்கள் காலம்போல இருண்டது’ என்று சொல்லும் அளவுக்குப் போய் விட்டது. களப்பிரர்கள் காலம் என்பது இருண்ட காலமா, அது இருண்ட காலம் என்று எதனால் சொல்லப்படுகிறது என்பதை வரலாற்று, இலக்கிய ஆதாரங்களுடன் விளக்கும் செறிவான ஆய்வு நூல் இது.

வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படும் களப்பிரர்கள் ஏறத்தாழ கி.பி. 300 முதல் கி.பி. 600 வரை தமிழகப் பகுதியை ஆண்டார்கள். மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆண்டார்கள். சோழ நாட்டினை உறையூர், காவிரிப்பூம்பட்டினம் ஆகிய பகுதிகளைத் தலைநகராகக் கொண்டு ஆண்டார்கள். சேர நாட்டின் சில பகுதிகள் இவர்களது ஆளுகைக்கு உட்பட்டு இருந்தன. தனித்து ஆண்டார்களா அல்லது இவற்றை ஒருங்கிணைத்து ஆண்டார்களா என்பது இன்னமும் தெளிவாகவில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்