மிஸ்டர் கழுகு: “எந்த மந்திரியும் நிரந்தரம் இல்லை!”

சாட்டை சொடுக்கிய ஜெ.

“மீண்டும் சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்துவிட்டார் ஜெயலலிதா’’ என்றபடி என்ட்ரி ஆனார் கழுகார். செய்திக்கான முன்னோட்டத்தைக் கழுகாரே சொல்வார் எனக் காத்திருந்தோம். குறிப்பு நோட்டைப் புரட்டிவிட்டு நிமிர்ந்தார்.

‘‘பொதுக்குழுவில்தான் வழக்கமாக ஜெயலலிதா பொங்குவார். ஆனால், இந்த முறை செயற்குழுவிலேயே அக்னியைக் கக்கியிருக்கிறார். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செயற்குழுவைக் கூட்ட வேண்டும் என்பது அ.தி.மு.க-வின் பைலா. அதன்படி செயற்குழு கூடியிருக்கிறது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு கூடிய கூட்டம் என்பதால், தடபுடல் ஏற்பாடுகளுக்குப் பஞ்சம் இல்லை. பேனர்கள்தான் இல்லை. ஆனால், வாழைமரத் தோரணம், கட்சிக் கொடிகள் என கார்டன்முதல் கட்சி அலுவலகம்வரை அமர்களப்படுத்திவிட்டார்கள். செயற்குழு உறுப்பினர் என்பதால், சசிகலாவும் ஜெயலலிதாவின் காரில் வந்தார். வெளியே புன்னகையோடு தொண்டர்களுக்கு கை அசைத்த ஜெயலலிதா, உள்ளே இறுகிய முகத்துடன் நுழைந்தார். தேர்தலில் தோற்ற நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம் ஆகியோர் ஆண்கள் பகுதியில் முதல் வரிசையில் இடம் பிடித்து உட்கார்ந்திருந்தார்கள். செயற்குழு உறுப்பினர்களின் செல்போன்களுக்கு தடா போட்டுவிட்டார்கள். ஆனால், அதனையும் மீறி மூன்று பேர் செல்போனைக் கொண்டு வந்துவிட்டார்கள். அதையும் கண்டுபிடித்து எச்சரிக்கை செய்யப்பட்ட பிறகு கம்ப்யூட்டர் ரூமில் செல்போனைக் கொடுத்துவிட்டு வந்தார்கள்.’’

‘‘ம்.’’

‘‘தேர்தல் வெற்றி, ஆட்சி பொறுப்பேற்ற ஜெ-வுக்கு வாழ்த்து என 14 தீர்மானங்கள் நிறைவேற்ற​ப் பட்டன. ‘அரை நூற்றாண்டு​க்குப் பிறகு, ஒரு கட்சி, கூட்டணி எதுவும் இல்லாமல் ஒரே சின்னத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு, மகத்தான வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கும் அம்மாவுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை’ எனத் தீர்மானத்தில் புகழ்ந்திருந்தார்கள். மனிதநேய ஜனநாயகக் கட்சி, இந்திய குடியரசு கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை என ஐந்து கட்சிகளுடன் கூட்டணி வைத்துதான்
அ.தி.மு.க போட்டியிட்டது. ஆனால், அந்தக் கட்சிகள் அனைத்தையும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவைத்தது அ.தி.மு.க. அதனால் அந்தக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைத் தன் கணக்கில் சேர்த்துக்கொண்டு 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க எனச் சொல்லிவிட்டார்கள்.’’

‘‘மேட்டருக்கு வாரும்.’’

‘‘உள்ளே நுழையும்போது ஜெயலலிதா காட்டிய கடுகடுப்புக்குக் காரணம் அவருடைய பேச்சில் எதிரொலித்தது. ‘இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற நாம், இப்போது 200 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று இருக்க வேண்டாமா? தி.மு.க போல இங்கேயும், துரோகம் செய்ய ஆரம்பித்ததால்தான் குறைவான இடங்களில் ஜெயித்திருக்கிறோம். மற்ற கட்சிகளில் பணம் வாங்கிக் கொண்டுதான் தேர்தலில் நிற்க சீட் கொடுக்கிறார்கள். ஆனால் நான், சீட்டும் கொடுத்து... தேர்தல் செலவுக்கு பணமும் தருகிறேன். நீங்கள் எனக்கே துரோகம் செய்கிறீர்கள். பல மாவட்டச் செயலாளர்கள் தன்னைத்தவிர மாவட்டத்தில் வேறு யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் ஜெயிக்கக் கூடாது என்று வேலை பார்த்து இருக்கிறார்கள்.

ஒரு மாவட்டச் செயலாளர் ஒரு சமுதாயத்தோடு பிரச்னை ஏற்படுத்தி, அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை சுயேட்சையாக நிற்கவைத்து நம்ம கட்சி வேட்பாளரைத் தோற்கடித்த விஷயம் எல்லாம் எனக்குத் தெரியும். ஒரத்தநாடு தொகுதியில் நாம் தோற்றதற்கு என்ன காரணம் என்கிற தகவலும் எனக்கு வந்துவிட்டது. பலர் தேர்தல் செலவுக்குக் கொடுத்த பணத்தைப் பதுக்கியதோடு, தி.மு.க-வினரிடமும் பணம் வாங்கியிருக்கிறார்கள். இப்படி நிறையத் தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கிறேன். அந்த விவரங்கள் எல்லாம் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறேன்” என்று ஆக்ரோஷம் காட்டினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்