முறைகேடுகளின் மொத்த உருவம் சென்டாக்...

புதுவை மருத்துவக் கல்லூரி இடங்கள் விவகாரத்தில் சர்ச்சை!

புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசுக்கான இடங்களைத் தகுதியான மாணவர்களைக் கொண்டு நிரப்புவதற்காகத் தொடங்கப்பட்டது சென்டாக் அமைப்பு. ஆனால், இதில் நடக்கும் முறைகேடுகள் வியாபம் ஊழலையே மிஞ்சுகிறது.

புதுவை மாநிலத்தில் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இதில் உள்ள 1,000 மருத்துவ இடங்களில் 50 சதவிகித இடங்களை மாநில அரசுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசுக்கு ஒதுக்கீடு செய்திருப்பதாகச் சொல்லிவிட்டு, அந்த இடங்களை அண்டை மாநில மாணவர்களுக்குக் கோடிக்கணக்கில் விற்று லாபம் பார்க்கின்றன தனியார் மருத்துவக் கல்லூரிகள். மாநில அரசின் உதவியின்றி கல்லூரி நடத்த முடியாது என்ற சூழல் இருக்கும்போது ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தங்களின் சுய லாபங்களுக்காக, ஒவ்வொரு வருடமும் சொற்பமான இடங்களைப் பிச்சை எடுக்காத குறையாகவே தனியார் கல்லூரிகளிடம் கேட்டு வாங்குகின்றனர். அதிலும் அரசுக்குச் சொந்தமான 50 சதவிகித மருத்துவ இடங்களைக் கேட்டுப் பெறுவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசும் சென்ற ஆட்சிக்காலத்தைவிட சிறிது அதிகமான  இடங்களைக் கூடுதலாகப் பெற்றதற்கே மார்தட்டி பெருமைப்பட்டுக்கொண்டது. இந்த வருடம் இவர்கள் பெற்றிருக்கும் 283 இடங்கள் என்பது 30 சதவிகிதத்துக்கும் குறைவானதே.

மேலும் காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளுக்கு இட ஒதுக்கீடு என்ற ஒன்றைக் கடைப்பிடிக்கிறது புதுச்சேரி அரசு. அனைத்து ஒதுக்கீட்டின் மூலமும் இடங்களைப் பெற்றுக்கொள்ளும் இவர்கள் பொதுப் பிரிவிலும் கணிசமான இடங்களைப் பெற்றுக்கொள்வதால் புதுச்சேரி மாணவர்கள் பெரிதும் வஞ்சிக்கப் படுகிறார்கள். கல்வியில் பின்தங்கியவர்கள் என்று இவர்கள் சொல்லும் மாஹே, ஏனாம் மாணவர்கள்தான் ஒவ்வொரு வருடமும் முதல் ஐந்து இடங்களில் வருகிறார்கள். ஒரே  மாநிலத்தில் மூன்று மாநில பாடத்திட்டங்களைக் கடைப்பிடிக்கிறது புதுச்சேரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்