மர்மங்களை மறைக்கும் நபர் யார்? - மதுரை மருத்துவமனை

முறைகேடு

“காசு கொடுத்தால்தான் ஸ்ட்ரெட்சர் தள்ளுவேன்” என்று 19.6.2016 ஜூ.வி இதழில் மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த கொடூரச் சம்பவத்தைச்​ சொல்லியிருந்தோம். அது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. ராஜேந்திர பிரசாத் மரணத்துக்குக் காரணமான ‘லஸ்கர்’ இருவரை பெயர் அளவில் சஸ்பெண்ட் செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் மருத்துவமனையில் நடக்கும் பல்வேறு ஊழல்களைச் சிலர் நம்மிடம் பட்டியலிட்டனர்.

உள்வாடகையில் வண்டி தள்ளும் ‘லஸ்கர்கள்’!

அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெட்சர்  தள்ளும் நபர்களை லஸ்கர் என்று சொல்வதுண்டு. இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப் படுகின்றனர். இந்தப் பணிக்கே ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை லஞ்சம் கொடுத்து வருகிறார்களாம். வேலைக்குச் சேரும் லஸ்கர்கள்,  தங்களது வேலையை உள் வாடகைக்கு விடுகிறார்கள். உள்வாடகைக்கு வரும் நபர்கள் நோயாளிகளிடம் 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டாய வசூல் வேட்டை நடத்துகிறார்கள். இவர்களைக் கண்காணிக்கும் ஒருவருக்கு மாதம் இரண்டு லகரங்களைக் கொடுக்கிறார்களாம். அவர், அதில் ஒரு பாதியை மேல்மட்டத்தில் இருக்கும் முக்கியமான ஒருவருக்குக் கொடுக்கிறாராம்.

   செல்ஃப் சர்வீஸ் ஸ்கீமில் ஊழல்!


‘செல்ஃப் சர்வீஸ் ஸ்கீம்’ என்ற திட்டத்தில் ஒதுக்கிய தொகையில் மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் பல லட்சங்களில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதாகப் பொய்யான பில்களை வைத்துள்ளனர். இதில் பல லட்சங்களில் ஊழல் நடந்திருக்கிறதாம். இதனால் மாவட்ட நிர்வாகம் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொடுக்கும் நிதியை நிறுத்திவிட்டது.

  போலி கணக்கு எழுதிய டாக்டர்கள்!

“முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடந்துள்ளன. ஒரு சில டாக்டர்கள் அறுவைச்சிகிச்சை செய்யாமலேயே ஏழு கோடி ரூபாய் ஊக்கத் தொகையை வாங்கி உள்ளனராம். டாக்டர்கள் மருத்துவமனைக்கு வராமலேயே அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதாகப் பொய்யாகக் கணக்குக் காட்டி காசும் கறந்துள்ளனர். ஒட்டுறுப்புத் துறையில் ரூ.40 லட்சத்துக்கு மூன்று வென்டிலேட்டர்களை வாங்கி அதற்கு ஆக்ஸிஜன் சப்ளை கொடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர். இருதய அறுவைச்சிகிச்சைப் பிரிவில் ரூ.76 லட்சத்தில் ஹீட் லங் மெஷின் என்கிற இரண்டு கருவிகள் வாங்கினார்கள். அதன்தரம் படுமோசமாக இருக்கிறது. இப்படி ஒவ்வொரு பொருளிலும் காசு பார்க்கும் துறையாக இருக்கிறது மதுரை ராஜாஜி மருத்துவமனை” என்று கவலையுடன் சொன்னார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.

தமிழகம் முழுவதும் 110 அரசு மருத்துவர்கள் பல்வேறு இடங்களில் மாற்றுப்பணி என்று மருத்துவமனைக்கு வராமல் சம்பளம் வாங்குவதையும் சுட்டிக்காட்டி எழுதி இருந்தோம். அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுரை அரசு மருத்துவமனையில் வருகைப்பதிவு நோட்டில் பல்வேறு மருத்துவர்களின் கையெழுத்துகள் மாறி மாறி இருக்கின்றன. ஒரு மருத்துவர், பணிக்கு வந்துவிட்டு பல்வேறு நபர்களுக்கு இனிஷியல் போடுகின்றனராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்