பன்னீர் தம்பியை பாதுகாக்கிறதா போலீஸ்?

அரசு வழக்கறிஞரே விலகுகிறார்!விசாரணை

பூசாரி நாகமுத்துவை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதில் குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் ஓ.ராஜாவைக் காப்பாற்ற விசாரணை அதிகாரிகள் ஒத்துழைப்புத் தராமல் இழுத்தடிப்பதாக நாகமுத்துவுக்காக ஆஜர் ஆகும் அரசு வழக்கறிஞர் பவானி
ப.மோகன் பகீர் கிளப்பியிருக்கிறார். நிலைமை இப்படியே நீடித்தால், இந்த வழக்கில் இருந்து விலகிக்கொள்வதாகவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்திருக்கிறார். நிதி அமைச்சர் ஓ.பி.எஸ்-ஸின் தம்பிதான் இந்த ஓ.ராஜா.

2012-ம் ஆண்டு பெரியகுளம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்த நாகமுத்து என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார்.  ‘பெரியகுளம் நகராட்சி சேர்மனும் முன்னாள் முதல்வரும் இன்னாள் நிதி அமைச்சருமான ஓ.பி.எஸ்-ஸின் தம்பி ஓ.ராஜா என்னை அடித்துத் துன்புறுத்தியதால் என் குடும்பத்தைக் காக்க நான் தற்கொலை செய்துகொள்கிறேன். என் சாவுக்குக் காரணம் ஓ.ராஜா, மணிமாறன், தென்கரை பேரூராட்சித் தலைவர் பாண்டியன் உள்ளிட்ட ஏழுபேர்தான்’ என எழுதி வைத்துவிட்டு இறந்துபோனார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்