மதம் பிடித்துவிட்டதா அதிகாரிகளுக்கு?

மகாராஜாவை காவு வாங்கிய மயக்க மருந்து...

ஓர் உயிரினத்தைப் பாதுகாக்கத் தெரியாத உயிரினமாக மனித இனம் மாறிக்கொண்டு இருக்கிறது என்பதற்கு உதாரணம் மகாராஜா என்ற யானையின் மரணம்!

கோவை மதுக்கரை பகுதியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே காட்டு யானைகள் ஊருக்குள்ளும், விளைநிலங்களுக்கும் வந்துவிடுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் இருந்தனர். அந்த யானைகள், மதுக்கரையை ஒட்டிய நெடுஞ்சாலையை அடிக்கடி கடந்துசெல்வதும், இதனால் பயிர்கள் சேதம் ஆவதும் தொடர்ந்தது. இந்த யானைகளின் செயல்பாடுகளால் மிரண்ட மக்கள், தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று வனத்துறைக்குக் கோரிக்கை வைத்தனர்.

‘கட்டையன்’ என்று இந்த யானைக்கு மக்கள் பெயர் சூட்டினர். ‘மதுக்கரை மகாராஜா’ என வனத்துறையால் பெயர் சூட்டப்பட்டது. இந்த மகாராஜாவைப் பிடிப்பதற்கு வனத்துறை முடிவு செய்தது. யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்ட முன்யோசனையுடன் திட்டமிட்டு இருக்க வேண்டிய வனத்துறையினர், அலட்சியமாகவே செயல்பட்ட விளைவுதான் இந்த மரணம்.

யானையைப் பிடிப்பதாக இருந்தால் கும்கி யானையைவைத்துப் பிடிக்க வேண்டும். வனத்துறை யினர், அதிரடிப்படையினர், வேட்டைத் தடுப்புக் காவலர்கள், யானைப் பாகன்கள் ஆகியோர் நான்கு கும்கிகளுடன் இந்த முயற்சியில் இறங்கினர். இது போதாது என்று மயக்க ஊசி போட்டுப் பிடிக்கவும் திட்டமிட்டனர்.

மதுக்கரை மகாராஜாவை மயக்க ஊசி போட்டுப் பிடிக்க மருத்துவக் குழு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. யானையைப் பிடிக்க 19-ம் தேதி என நாள் குறிக்கப்பட்டது. அன்றைய தினம் அதிகாலையில் பெரிய பட்டாளமே மதுக்கரையில் குவிந்தது. மதுக்கரை மகாராஜாவுடன் மேலும் இரு யானைகள் சுற்றித்திரிந்தன. மகாராஜாவை மட்டும் பிரித்து, மயக்க ஊசி போட்டுப் பிடித்தனர். பல நூறு மக்கள் மத்தியில் சாதனையை நிகழ்த்துவதுபோல, காட்டு யானையை அரை மயக்கத்தில் கும்கியின் உதவியுடன் டாப்சிலிப் கொண்டு சென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்