பழிக்குப் பழி... ரத்தத்துக்கு ரத்தம்!

ஒரு காதலின் பின்னணியில் பெருகும் வன்முறை...

வுடிகள் தங்களின் பழிக்குப் பழி வன்மத்தைத் தீர்த்துக்கொள்ள சேலம் நீதிமன்ற வளாகத்தில் வீச்சரிவாளால் வெட்டியதும், பெட்ரோல் குண்டு வீசியதும் தமிழக ஆளும் கட்சியின் சட்டம் - ஒழுங்குச் சீர்கேட்டுக்கு உச்சபட்ச உதாரணமாக இருக்கிறது.

இந்த சம்பவத்துக்கு என்ன காரணம்?

இதுபற்றி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘கிச்சிப்பாளையம் 44-வது டிவிஷனில் செல்லதுரை, நெப்போலியன் என இரண்டு  கோஷ்டிகள் இருக்கின்றனர். இவர்கள் ஆட்கடத்தல், கொலை, கொள்ளை, கூலிப்படை என ஒன்றாகத் தொழில்செய்து வந்தார்கள். கடந்த வருடம் செல்லதுரை கோஷ்டியில் உள்ள சூரியா என்பவர் நெப்போலியனின் உறவுக்காரப் பெண்ணைக் காதலித்தார். இது நெப்போலியன் கோஷ்டிக்குத் தெரிந்து நெப்போலியன் தம்பி குட்டியும், அவரது நண்பர் விக்கியும் சூரியாவை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து தன் கோஷ்டிக்கு சூரியா தகவல் கொடுக்க, செல்லதுரை ரவுடி டீம் வந்து, அவர்கள் இருவரையும் அடித்துத் துவைத்துள்ளது. விக்கி, தப்பி ஓடிவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்