“76 சதவிகிதம் அதிகம் சம்பாதித்து உள்ளார்!”

உச்ச நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை தொடங்கியது...

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பிப்ரவரி 24. தமிழகம் முழுவதும், அ.தி.மு.க-வினர் அந்த நாளை ரணகளமாகக் கொண்டாடிக் கொண்டி ருக்கின்றனர். ஆனால், அவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில், பிப்ரவரி 23-ம் தேதி, அதகளமான பிறந்தநாள் பரிசை ஜெயலலிதாவுக்கு வழங்கியது உச்ச நீதிமன்றம். சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், இறுதி விசாரணையை அன்றே தொடங்கவும் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

இழுத்தடிப்பு வேலை!

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்தார் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி. அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிர்தவராய் அமர்வு முன்னிலையில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணை, பிப்ரவரி 2-ம் தேதியில் இருந்து தொடர்ந்து நடைபெறும் என நீதிபதிகள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இதற்கிடையில், இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான பினாகி சந்திரகோஷ் அமர்வில், அருணாச்சலப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அதைக் காரணம்காட்டி, தன்னுடைய வழக்கை ஒரு வாரம் ஒத்திவைக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார் ஜெயலலிதா. அதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கும் விசாரணையை பிப்ரவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்