ஜெ. பொக்கே... 7 ஆயிரம்!

லைவர்களைச் சந்திக்க சால்வை வாங்கிச் சென்ற காலம் மாறி, ஊராட்சி மன்றத் தலைவரைக்கூட பொக்கே வாங்க வைத்தது ஜெயலலிதாவின் ஸ்டைல்.

படியில் ஏறும்போது கைப்பிடியைக்கூட தொட விரும்பாதவர் ஜெயலலிதா. ஆனால், பூங்கொத்தை மட்டும் தொடுவார். அதன் பின்னால் சுவாரஸ்யமான கதை இருக்கிறது.

“பொக்கே என்றால் முதல்வருக்குப் பிடிக்கும். அவருக்குக் கொடுக்கப்படும் பொக்கே எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில விதிகளும் உண்டு. ஜெயலலிதாவுக்கு ராசி இல்லாத நிறங்களில் இருக்கக் கூடாது. பூக்கள், அதில் சுற்றப்படும் துணி, ஜரிகை என அனைத்துமே அவருக்கு ராசியான நிறங்களில்தான் இருக்க வேண்டும். முதல்வரின் முதல் சாய்ஸ், ‘பக்கெட்’ பொக்கே. குனிந்து கொடுப்பதற்கு வசதியாக இருப்பதால், பக்கெட் பொக்கேவையே பெரும்பாலும் தேர்வு செய்கிறார்கள் அமைச்சர் பெருமக்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்