கழுகார் பதில்கள்!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

 2011 விஜயகாந்த் - 2016 விஜயகாந்த்... ஒப்பிடுங்கள்?


 அப்போது அவருக்காக ஜெயலலிதா காத்துக்கொண்டு இருந்தார். இப்போது கருணாநிதி காத்துக்கொண்டு இருக்கிறார். ஐந்து ஆண்டு காலமாக இரண்டு பெரிய கட்சிகளையும் தன்னை நோக்கிய எதிர்பார்ப்பில் வைத்திருப்பதுதான் விஜயகாந்த்தின் வெற்றி. அப்போது விஜயகாந்த் கொஞ்சம் தெளிவாகப் பேசுவார். இப்போது அவர் பேசுவதை உன்னிப்பாகக் கவனித்தால்தான் என்ன சொல்ல வருகிறார் என்று புரிகிறது.

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

 விஜயகாந்த் தனித்துப் போட்டியிட்டு தனது வாக்கு வங்கியை அதிகப்படுத்திக்கொள்ளலாமே?


 இப்படி ஓர் ஆலோசனையை விஜயகாந்த்துக்கு டிராஃபிக் ராமசாமி சொல்லி இருக்கிறார். ‘அது மாதிரியாவும் நான் யோசிக்கிறேன்’என்றாராம் விஜயகாந்த். ‘நீங்க போய் சேர்ந்து தி.மு.க-வை வளர்த்துவிடாதீர்கள்’ என்றும், ‘அதற்காக மக்கள் நல கூட்டணியுடனும் சேர வேண்டாம்’ என்றும் எல்லா பிரேக்குகளையும் டிராஃபிக் போட்டுள்ளார். அனைத்துக்கும் தலையாட்டினாராம் விஜயகாந்த். டிராஃபிக் கடைசியில் சொன்னதுதான் சூப்பர்.‘நீங்க தனித்துப் போட்டியிட்டால் என்னோட ஆதரவு உங்களுக்குத்தான்!”

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

 மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கும் ஜெயலலிதாவின் அறிவிப்பு?


 உண்மையில் வரவேற்கத்தகுந்த திட்டம் இது. இப்படி ஒரு சிந்தனையை ஜெயலலிதா, தனது தேர்தல் அறிக்கையில் 2011-ம் ஆண்டே சொல்லி இருந்தார். வந்ததும் அதனை நிறைவேற்றி இருந்தால், கடந்த ஐந்தாண்டு காலத்தில் எத்தனையோ மக்கள் கவலை இல்லாமல் பயணப்பட்டு இருப்பார்கள். ஆட்சிக் காலம் முடியும்போது செய்துள்ளார். அவரைச் சுற்றி இருக்கின்ற அதிகாரிகள், அமைச்சர்கள் தேர்தல் அறிக்கையை வைத்து என்னென்ன திட்டங்களைச் செய்துள்ளோம், செய்யவில்லை என்பதை முதல் ஆண்டே பார்த்திருக்க வேண்டாமா? இதைவிட இவர்களுக்கு என்ன வேலை?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்