மிஸ்டர் கழுகு: 20 நிமிடங்கள் பேசிய வெங்கய்ய நாயுடு - பி.ஜே.பி. நெருக்கடி!

சூடு பிடிக்கும் சொத்து வழக்கு விசாரணை

ழுகார் உள்ளே நுழையும்போதே சிறகுகளுக்குள் இருந்து சில தாள்கள் சிதறின. அதனை ஒவ்வொன்றாக சீட்டுக் கட்டுகளைப்போல அடுக்க ஆரம்பித்து, ஒவ்வொன்றாக எடுத்துப் பேச ஆரம்பித்தார். முதல் சீட்டில் விஜயகாந்த் என்று எழுதப்பட்டு இருந்தது.

“தே.மு.தி.க-வின் இன்றைய நிலைமையைச் சொல்லிவிடுகிறேன். காஞ்சிபுரம் மாநாட்டில் தி.மு.க-வை விஜயகாந்த் அட்டாக் செய்யவில்லை என்பதை கடந்த இதழில் சொல்லி இருந்தேன். பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைக்கலாம் என்று பிரேமலதா சொல்​வதாகவும், அவரது தம்பி சுதீஷ்,
தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கலாம் என்று சொல்வதாகவும் தகவல்!”

‘‘விஜயகாந்த் என்ன நினைக்கிறார்?”

‘‘அதை அவர் பிரேமலதா, சுதீஷ் ஆகிய இருவருக்கும் தெரியாமல் மனதுக்குள் பாதுகாத்து வருகிறார். வேட்பாளர் நேர்காணலுக்காக வந்தவர்களில் பெரும்பா​லானவர்கள், தி.மு.க கூட்டணியில் சேர வேண்டும் என்று கருத்துச் சொன்னார்களாம். தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்​களில் பெரும்பாலா​னவர்களின் கருத்தும் அதுதானாம். ‘தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தால்தான் வெற்றி பெற முடியும். இந்தத் தேர்தலில் கேப்டன் முதல்வர் ஆகாவிட்டாலும் எதிர்க் கட்சித் தலைவராக மீண்டும் ஆக வேண்டுமானால், தி.மு.க-வுடன்தான் கூட்டணி அமைக்க வேண்டும்’ என்று இந்த எம்.எல்.ஏ-க்கள் சொல்லி வருகிறார்கள். ‘ஒருவேளை தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கா​விட்டால், நாங்கள் தி.மு.க-வுக்குப் போய்விடுவோம்’ என்று சில எம்.எல்.ஏ-க்களும் மாவட்டச் செயலாளர்களும் சொல்லி வருகிறார்கள்!”

‘‘விஜயகாந்த் என்ன சொல்கிறார்?”

‘‘தி.மு.க., பி.ஜே.பி., மக்கள் நலக்​கூட்டணி ஆகிய மூன்று தரப்புக்கும் சம்மதம் தெரிவிப்பது மாதிரி சொல்லி அனுப்பி இருக்கிறார் விஜயகாந்த். தி.மு.க-​வுடன் பேச்சுவார்த்தை நடத்துபவர்கள், ‘55 தொகுதிகளை தி.மு.க தரத் தயார் ஆகிவிட்டது. கேப்டன் 70 தொகுதிகள் கேட்கிறார்’ என்று சொல்கிறார்கள். ‘இரண்டு வாரங்களில் நல்ல முடிவைச் சொல்கிறேன்’ என்று பி.ஜே.பி தரப்புக்குச் சொல்லி அனுப்பி இருக்கிறார் விஜயகாந்த். வைகோவிடம், ‘என்னை முதல்வர் வேட்பாளராக அறிவியுங்கள்’ என்று கோரிக்கை வைத்துள்ளார். இது மூன்று தரப்பையும் தலையைப் பிய்த்து அலைய வைத்துள்ளது!”

‘‘மூன்று கட்சிகளின் ரியாக்‌ஷன் என்ன?”

“கருணாநிதி, ‘விஜயகாந்த்தை அவசரப்படுத்த வேண்டாம். தேர்தல் தேதி அறிவித்ததும் பார்த்துக்கலாம். இப்ப அவரு நம்ம கூட்டணிக்கு வந்தா, இந்த ஒரு மாசம் அவர் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க வேண்டி வரும். தேர்தல் பரபரப்பு ஆரம்பிச்சுருச்சுன்னா சமாளிச்சுக்கலாம்’ என்றாராம். கடந்த 24-ம் தேதி திருச்சியில் ம.தி.மு.க பொதுக்குழு நடந்தது.

அப்போது பேசிய வைகோ, ‘தேசிய முற்போக்கு திராவிடர் கழகமும் தமிழ் மாநிலக் காங்கிரஸும் நம்முடைய கூட்டணிக்கு நிச்சயம் வரும்’ என்று சொன்னாராம். அப்போது, ‘இப்படி புதிய கட்சிகள் வரும்போது கட்சியின் நலனுக்காகச் சில முடிவுகளை நான் எடுக்க வேண்டி வரும். அதைத் தொண்டர்கள் அனைவரும் ஏற்கவேண்டும்’ என்றாராம் வைகோ!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்