கலைஞருக்கு வீழ்ச்சி... ஜெயலலிதாவுக்கு சிறை!

பொதுக்குழுவில் பொங்கிய வைகோ!

ம.தி.மு.க. இந்தத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கு முந்தைய பொதுக்குழு என்பதால், தொண்டர்களுக்கு உற்சாக டானிக்குகளை அள்ளி வழங்கினார் வைகோ.

ம.தி.மு.க-வின் 24-வது பொதுக்குழு கூட்டம் திருச்சியில் கடந்த 24-ம் தேதி நடந்தது. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, மல்லை சத்யா, ஈரோடு கணேசமூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். யானையைக் கொண்டு வந்து வைகோவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. வைகோ மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். நிர்வாகிகளின் பேச்சுக்களைக் கலகலப்பாகக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார் வைகோ. “நாளிதழ்களில் ஜெயலலிதாவை விமர்சித்து தி.மு.க வெளியிட்டுள்ள விளம்பரத்தால், தமிழகம் படாதபாடுபடுகிறது. ஜெயலலிதா சொத்துக் குவித்ததைப் பார்த்தோம், கருணாநிதி குடும்பம் 2ஜி ஊழலில் வாரிச் சுருட்டியதைப் பார்த்தோம். முல்லை பெரியாறு, ஈழத்தமிழர் பிரச்னையில் நம் தலைவர் வைகோவின் போராட்ட குணத்தைப் பார்த்தோம். என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா” என்று பேசி கைத்தட்டல்களை அள்ளினார், மருத்துவர் ரொஹையா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்