பெரியோர்களே... தாய்மார்களே! - 67

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

ன்னியாகுமரி கேரளாவுக்குப் போயிருந்தால், 133 அடியில் வான்புகழ் வள்ளுவனுக்கு சிலை வடித்திருக்க முடியாது.

‘வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்’
என்ற தொல்காப்பியச் சூத்திரத்தை தைரியமாகச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.

‘‘தென்னெல்லை காத்தருளும் தேவி குமரீநின்
பொன்னடியைக் கும்மிட்டு போற்றுகின்றேன் மன்னுபுகழ்
செந்தமிழ் நாடொன்றாகித் தேவர் நாடொத்துலகில்
சந்தமும் வாழ வரம் தா’’


- என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடிக்காட்டிய பாடலைக் கண்மூடி பிரார்த்திக்க முடியாது.இயற்கைப் பேரழிவால் குமரிக்கண்டம் அழிந்ததைப்போல செயற்கைப் பேரழிவால் தென்குமரி எல்லை, தமிழ்நாட்டுடன் இல்லாமல் கேரளாவுக்குப் போய் விடக் கூடாது என்று பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் அரை நூற்றாண்டு காலம் போராடியதன் விளைவு தான் கன்னியாகுமரி மாவட்டம் நம்மோடு இருப்பது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்